maniyosai.com

You are here: Home சினிமா திரைப்பட விமர்சனம் ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்

E-mail Print
User Rating: / 5
PoorBest 

ஆதிவாசிகள், சோழர் பரம்பரை, போர் என்று பிரம்மாண்டமாக மிரட்டியிருக்கிறார் செல்வராகவன். மனுஷன் லேட் செஞ்சாலும், படத்தில் நிறைய உழைப்பு தெரிகிறது.

ஆயிரத்தில் ஒருவன் கதை சுருக்கத்தை அவ்வளவு சுருக்கமாக எழுதி விட முடியாது.

கதை, 13ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது.

சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் பயங்கர போர்.  பாண்டியர்களுக்கு சொந்தமான குலதெய்வ சிலை சோழர் வசம் இருக்கிறது. சோழ அரசனோ, அந்த சிலையை தன் மகனிட்டம் கொடுத்து, பாண்டியன் கையில் சிக்காமல் ஒளித்து வைக்க சொல்லி விடுகிறான். அந்த சிலையை சோழ அரசனின் மகன், வியட்நாமுக்கு எடுத்து சென்று விடுகிறான்.

ayirathil oruvan andreaசோழ இளவரசனை கண்டுபிடிக்க பாண்டியர்கள் முயற்சித்தும் முடியவில்லை. அவன் இருப்பதாக நம்பப் படும் இடத்துக்கு சென்றவர்கள் உயிருடன் திரும்பியதில்லை என்ற மர்மம் வேறு. பல நூற்றாண்டுகளாகியும் இந்த தேடுதல் வேட்டை முடிந்த பாடில்லை.

இந்த முன் கதை சுருக்கம் ஸ்லைட் ஷோ போல ஆரம்பத்தில் வந்து விடுகிறது (தசாவதாரம் impact?). படம் நிகழ்காலத்தில் தொடங்குகிறது.

சோழன் சென்றதாக நம்பப்படும் இடத்திற்கு ஆராய்ச்சியாளர் பிரதாப் போத்தன் செல்கிறார். பாவம், அவரும் காணாமல் போய் விடுகிறார். அவரை கண்டு பிடிக்கும் பொறுப்பை அரசு ரீமா சென் தலைமையிலான குழுவுக்கு ( செல்வராகவனுக்கு மட்டும் எப்படி இப்படிப்பட்ட ஐடியாலாம் தோணுதோ!)அளித்து விடுகிறது. அந்த டீமுடன் பிரதாப் போத்தனின் மகள் ஆண்ட்ரியாவும் சேர்ந்து கொள்கிறார். வியட்நாம் செல்லும் இவர்களுக்கு சுமை தூக்கும் போர்டர் குழுவின் தலைவராக வந்து சேர்கிறார் கார்த்தி.

சோழர்கள் தப்பிச் சென்றதாக நம்பப்படும் இடத்தை கடந்து செல்ல கடல், ஆதிவாசிகள், பாம்பு, பசி தாகம், புதைக்குழிகள், திகில் கிராமம் என ஏழு ஆபத்துகளை அவர்கள் கடந்தாக வேண்டும்.

இப்படி காமிக்ஸ் கதைகளில் வரும் அயிட்டங்களுடன், ரீமா சென், ஆண்ட்ரியா கிளாமரையும் சேர்த்து வித்தியாசமான மசாலா படமாக இதை இயக்கியுள்ளார் செல்வராகவன்.

பருத்தி வீரனில் நடித்து 3 ஆண்டுகள் கழித்து கார்த்தி நடித்து வெளிவந்துள்ளது ஆயிரத்தில் ஒருவன். கார்த்தியை, ‘ஆயிரத்தில் ஒருவன்' என்று பாராட்டும் அளவு இல்லை என்றாலும், பொறுத்தது வீணாகவில்லை. சிவகுமாரும், சூர்யாவும் பெருமை பட்டுக் கொள்ளலாம்.

ஆனால், இவரைவிட ஹீரோயின்களின் ஆதிக்கமே படத்தில் அதிகம். ரீமா சென்னுக்கு சொல்லிக் கொள்ளும் அளவு இருக்கிறது ஆயிரத்தில் ஒருவன்.

இது போன்ற period films இயக்கும் போது, பல நூல்களை படித்து விட்டு, பல ஆராய்ச்சியாளர்களிடம் ஆலோசித்தப் பிறகே திரைக்கதை எழுத வேண்டும். பிரம்மாண்டத்தில் கவனம் செலுத்திய அளவு லாஜிக்களில் கவனம் செலுத்தவில்லை இயக்குனர்.

கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா காட்சிகளில் பிண்ணி பிணைந்து வரும் கிளாமரையும், இரட்டை அர்த்த வசனங்களையும் தவிர்த்திருக்கலாம்.

ஒளிப்பதிவாளரை முழு மனதாக பாராட்டலாம்.

மொத்தத்தில், திரைக்கதையில் தெளிவு இல்லாததால், ஆயிரத்தில் ஒருவனை, கடலில் கரைத்த பெருங்காயம் என்றே கூற முடிகிறது!

மணியோசை கணிப்பு: 40/100

பி.கு: திருட்டு விசிடியில் பார்த்தால் சத்தியமாக புரியாது. தியேட்டரில் பார்த்தால் பாதி புரியும்.

 


Comments (2)
  • Anonymous

    :roll y you didn't explain the story fully?

  • STALIN  - hi

    indha story unmaiya poiya tel first

Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate:
:?::(:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
Last Updated ( Wednesday, 10 March 2010 19:08 )  
Banner

கிட்டதட்ட

24 June 2010, 12.34 செய்திகள்
செம்மொழி மாநாட்டில் மாற்றுத் திறனாளிகளின் நடன நிகழ்ச்சி: வாய்ப்பளித்த முதல்வருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி
கோவை: கோவையில் நடந்து வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் 2 வது...மேலும்...
0 Comments , 35 Hits
28 June 2010, 14.00 திரைப்பட விமர்சனம்
களவாணி விமர்சனம்
களவாணி திரைப்படத்தில் இல்லாதவற்றை முதலில் பட்டியலிடுகிறோம்....மேலும்...
0 Comments , 339 Hits
22 July 2010, 22.20 சினிமா செய்திகள்
மீண்டும் பாக்யராஜ்
கோலிவுட்: கவர்ச்சிக் கன்னி சோனாவின் கன்னித் தயாரிப்பில் கனிமொழி...மேலும்...
0 Comments , 45 Hits
22 August 2010, 17.48 சினிமா செய்திகள்
திரைப்படக் கலைஞர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டம்: முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்
சென்னை, : திரைப்படம் மற்றும் சின்னத்திரைக் கலைஞர்களுக்கு வீடு...மேலும்...
0 Comments , 13 Hits

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என விஜயகாந்த் சொல்வது...

<

மருத்துவம்

ஹெல்த் ப்ளஸ் - மெட்ராஸ் ஐ வராமல் தடுப்பது எப்படி?
’மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் அழையா விருந்தாளி....மேலும்
0 Comments , 33 Hits
ஹெல்த் ப்ளஸ் - நமீதா டூ திரிஷா
நாம் தீவிரமாக செய்கிறோமோ இல்லையோ, எடைக் குறைத்தல் பற்றி...மேலும்
1 Comment , 303 Hits
ஹெல்த் ப்ளஸ் - கோடையை சமாளிக்க சில வழிகள்
கோடை காலம் வந்தாலே குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். 2...மேலும்
4 Comments , 233 Hits

Feedback Form
Feedback Analytics