ஏற்கனவே பல முறை பார்த்து பழக்கப் பட்டுப் போன படங்களை தொகுத்து ஒரே படமாக பார்க்கும் எஃபக்டை ஏற்படுத்தும் திரைப்படம் ‘அசல்'. அண்டர்வேர்ல்டு தாதா கதைகளை அவசரமாக யாராவது தடை செய்தால் புண்ணியமாகப் போகும்.
இந்தப் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம். நிழல் உலக தாதாவாக தந்தை அஜீத். அவருக்கு முன்று மகன்கள். முதல் இரண்டு மகன்களும் மனைவிக்கு பிறக்க, ஜூனியர் அஜீத், துணைவிக்கு பிறக்கிறார்.
தன் தொழில் வாரிசாக, துணைவி வழி மகன் அஜித்தை நியமிக்கிறார் தந்தை அஜித்.
இதனால், மனைவி வழி மகன்கள் கோபம் அடைகிறார்கள்.
தந்தை அஜீத் கொல்லப் படுகிறார்கள். இது தெரியாமல் ஜூனியர் அஜீத் அவர்களுக்கே உதவப் போகிறார். அங்கே அவரையும் கொல்ல முயற்சிக்கிறார்கள். அதிலிருந்து ஜூனியர் அஜித் எப்படி தப்பிக்கிறார் என்பதே படத்தின் கதை. இதற்கிடையே, மகன் அஜித்தை துரத்தி, துரத்தி
காதலிக்க சமீரா ரெட்டியும், பாவனாவும் வேறு.
இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் மிளிர்வது அஜித். ஒரே மாதிரியான படங்களில் நடித்து போர் அடித்து வரும் போட்டி நடிகருடன் ஒப்பிடும் போது, அசல் ஸ்டார் அஜித்தான் என சொல்ல தோன்றுகிறது. அப்படியொரு பெர்ஃபெக்ஷன்.
பாவனாவுக்கும் சமீராவுக்கும் சொல்லிக் கொள்ளும் அளவு ரோல் இல்லை. சில காட்சிகளில் வந்து அஜித்தை காதலித்து விட்டு போகிறார்கள்.
மனைவி வழி மகன்களாக வரும் சம்பத்தும் ராஜீவ் கிருஷ்ணாவும் கன கச்சிதம்.
அஜித்தின் காஸ்டியூம்களில் ‘பில்லா' எஃபெக்ட் இன்னும் போகவில்லை. ரேமண்ட் விளம்பரமோ என்ற சந்தேகம் சில சமயங்களில் வருவதை தவிர்க்க முடியவில்லை.
யூகி சேது காமெடி பரவாயில்லை.
பரத்வாஜ் இசையும் சுமார் ரகம்தான். படன் மினிமம் கியாரண்டியாக ஓட பாடல்கள் முக்கியம் என்பதை அஜித் ஞாபகத்தில் கொண்டால் நல்லது.
ஸ்டைலிஷ் மேக்கிங் செய்ய உழைத்திருக்கும் சரண், திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார்.
அசல், பல ஹிட் படங்களின் 'சொதப்பல் நகல்' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
மணியோசை கணிப்பு: 42/100 (அதுவும் அஜித்துக்காக மட்டும்)
| < Prev | Next > |
|---|





’இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...’ன்னு புரட்சிகவி மட்டுமல்லாம ‘தேன் தேன் தேன்...’னு இன்றைய...
தூக்கம் வராம இருக்கறதுதான் இன்னிக்கு பல பேரோட பிரச்சினையே. ரொம்ப ஓவரா தூங்கி வழியறது ...
அண்மையில் எங்களுக்கு வந்த ஒரு மின்னஞ்சல் எங்களை திடுக்கிட வைத்தது. அந்த பகீர் மெயிலின்...