maniyosai.com

ஆட்டநாயகன்

E-mail Print
Share/Save/Bookmark

Aattanayagan

காதல் படங்களில் நடித்து வந்த இயக்குனர் வாசுவின் மகன் ஷக்தி ஆட்டநாயகன் படம் மூலமாக ஆக்சன் அவதாரம் எடுத்துள்ளார்.

நாசரின் மகன் ஷக்தி. எந்த பொறுப்பும் இல்லாமல் நண்பர்களுடன் ஊதாரித் தனமாக, ஊர் சுற்றி பொழுதை கழிக்கிறார். அவருடைய அண்ணன் ஆதித்யாவோ ஐதரபாத்தில் சொந்தமாக தொழில் வைத்து நடத்தி வருகிறார்.

இதனால், அண்ணனை போல் பொறுப்பாக இருக்கும் படி தந்தை நாசரிடம் இருந்து அடிக்கடி அறிவுரை பெற்றுக் கொள்கிறார். இதற்கிடையே, ரம்யா நம்பீசனுடன் காதல் வயப் படுகிறார் ஷக்தி. ரம்யா நம்பீசன் அக்கா மீரா வாசுதேவனை தன் அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி மேற்கொள்கிறார்.

திருமணத்துக்கு பிறகு, மீரா வாசுதேவனை ஐதரபாத் அழைத்து செல்கிறார் ஆதித்யா. அங்கு சென்ற பின் தான், ஆதித்யா ஐதரபாத்தின் மோசமான தாதா என தெரிந்துக் கொள்கிறார் மீரா வாசுதேவன். இந்த விஷயத்தை தன்னிடம் மறைத்து திருமணம் செய்து வைத்து விட்டதாக நினைக்கிறார் மீரா வாசுதேவன்.

Aatanayagan ramya nambeesanதன் அண்ணனை திருத்தி நல்வழிக்கு கொண்டு வரும் நோக்கில் ஐதரபாத் செல்கிறார் ஷக்தி. அங்கு அவர் தன் அண்ணனின் எதிரி ரவி கலேவுடன் மோத நேரிடுகிறது.

தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்த ஷக்தி, வன்முறையை ஒழிக்க, வன்முறையை கையில் எடுக்க நேர்கிறது. தான் எண்ணிய படி தன் அண்ணனை ஷக்தி திருத்தினாரா, வில்லனை எப்படி எதிர்கொள்கிறார் என்பது உச்சக் கட்டம்.

அரதப் பழசான கதையை, எந்த விசேஷமும் இல்லாத மாமூலான திரைக்கதையுடன் கொடுத்துள்ளார் புதுமுக இயக்குனர் கிருஷ்ணராம்.

தனக்கு கொடுக்கப் பட்ட கதாபாத்திரத்தை முடிந்த அளவு சிறப்பாக செய்ய முயற்சித்துள்ளார் ஷக்தி. காதல் காட்சிகளிலும், நகைச்சுவை காட்சிகளிலும் ஜொலிக்கும் அளவு, ஆக்சன் காட்சிகளில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. இருந்தாலும், ஷக்திக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதை உணர முடிகிறது.

ஆட்டநாயகன் படத்தில், எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் அடக்கமாக வந்து போகிறார் ரம்யா நம்பீசன். ஆனால், நடிப்பு திறமையை வெளிபடுத்த பெரிய சந்தர்ப்பம் அவருக்கு தரப் படவில்லை.

வழக்கம் போல் ஹீரோவின் நண்பனாக வந்து கலாய்த்துள்ளார் சந்தானம்.

ஆட்டநாயகன் படத்தில், சாஃப்ட்வேர் தொழிலதிபராகவும், தாதாவாகவும் வரும் ஆதித்யா மேனன், கவனிக்க வைக்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசை சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை.

ஃபார்முலா படி கதை செய்தால் படம் ஓடி விடும் என்ற மூடநம்பிக்கை இல்லாமல், நல்ல கதைக்காக கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நாயகனின் ஆட்டம் இன்னும் களை கட்டியிருந்திருக்கும்.

மணியோசை கணிப்பு - 40/100





Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 454 Hits