ஆதிவாசிகள், சோழர் பரம்பரை, போர் என்று பிரம்மாண்டமாக மிரட்டியிருக்கிறார் செல்வராகவன். மனுஷன் லேட் செஞ்சாலும், படத்தில் நிறைய உழைப்பு தெரிகிறது.
ஆயிரத்தில் ஒருவன் கதை சுருக்கத்தை அவ்வளவு சுருக்கமாக எழுதி விட முடியாது.
கதை, 13ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது.
சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் பயங்கர போர். பாண்டியர்களுக்கு சொந்தமான குலதெய்வ சிலை சோழர் வசம் இருக்கிறது. சோழ அரசனோ, அந்த சிலையை தன் மகனிட்டம் கொடுத்து, பாண்டியன் கையில் சிக்காமல் ஒளித்து வைக்க சொல்லி விடுகிறான். அந்த சிலையை சோழ அரசனின் மகன், வியட்நாமுக்கு எடுத்து சென்று விடுகிறான்.
சோழ இளவரசனை கண்டுபிடிக்க பாண்டியர்கள் முயற்சித்தும் முடியவில்லை. அவன் இருப்பதாக நம்பப் படும் இடத்துக்கு சென்றவர்கள் உயிருடன் திரும்பியதில்லை என்ற மர்மம் வேறு. பல நூற்றாண்டுகளாகியும் இந்த தேடுதல் வேட்டை முடிந்த பாடில்லை.
இந்த முன் கதை சுருக்கம் ஸ்லைட் ஷோ போல ஆரம்பத்தில் வந்து விடுகிறது (தசாவதாரம் impact?). படம் நிகழ்காலத்தில் தொடங்குகிறது.
சோழன் சென்றதாக நம்பப்படும் இடத்திற்கு ஆராய்ச்சியாளர் பிரதாப் போத்தன் செல்கிறார். பாவம், அவரும் காணாமல் போய் விடுகிறார். அவரை கண்டு பிடிக்கும் பொறுப்பை அரசு ரீமா சென் தலைமையிலான குழுவுக்கு ( செல்வராகவனுக்கு மட்டும் எப்படி இப்படிப்பட்ட ஐடியாலாம் தோணுதோ!)அளித்து விடுகிறது. அந்த டீமுடன் பிரதாப் போத்தனின் மகள் ஆண்ட்ரியாவும் சேர்ந்து கொள்கிறார். வியட்நாம் செல்லும் இவர்களுக்கு சுமை தூக்கும் போர்டர் குழுவின் தலைவராக வந்து சேர்கிறார் கார்த்தி.
சோழர்கள் தப்பிச் சென்றதாக நம்பப்படும் இடத்தை கடந்து செல்ல கடல், ஆதிவாசிகள், பாம்பு, பசி தாகம், புதைக்குழிகள், திகில் கிராமம் என ஏழு ஆபத்துகளை அவர்கள் கடந்தாக வேண்டும்.
இப்படி காமிக்ஸ் கதைகளில் வரும் அயிட்டங்களுடன், ரீமா சென், ஆண்ட்ரியா கிளாமரையும் சேர்த்து வித்தியாசமான மசாலா படமாக இதை இயக்கியுள்ளார் செல்வராகவன்.
பருத்தி வீரனில் நடித்து 3 ஆண்டுகள் கழித்து கார்த்தி நடித்து வெளிவந்துள்ளது ஆயிரத்தில் ஒருவன். கார்த்தியை, ‘ஆயிரத்தில் ஒருவன்' என்று பாராட்டும் அளவு இல்லை என்றாலும், பொறுத்தது வீணாகவில்லை. சிவகுமாரும், சூர்யாவும் பெருமை பட்டுக் கொள்ளலாம்.
ஆனால், இவரைவிட ஹீரோயின்களின் ஆதிக்கமே படத்தில் அதிகம். ரீமா சென்னுக்கு சொல்லிக் கொள்ளும் அளவு இருக்கிறது ஆயிரத்தில் ஒருவன்.
இது போன்ற period films இயக்கும் போது, பல நூல்களை படித்து விட்டு, பல ஆராய்ச்சியாளர்களிடம் ஆலோசித்தப் பிறகே திரைக்கதை எழுத வேண்டும். பிரம்மாண்டத்தில் கவனம் செலுத்திய அளவு லாஜிக்களில் கவனம் செலுத்தவில்லை இயக்குனர்.
கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா காட்சிகளில் பிண்ணி பிணைந்து வரும் கிளாமரையும், இரட்டை அர்த்த வசனங்களையும் தவிர்த்திருக்கலாம்.
ஒளிப்பதிவாளரை முழு மனதாக பாராட்டலாம்.
மொத்தத்தில், திரைக்கதையில் தெளிவு இல்லாததால், ஆயிரத்தில் ஒருவனை, கடலில் கரைத்த பெருங்காயம் என்றே கூற முடிகிறது!
மணியோசை கணிப்பு: 40/100
பி.கு: திருட்டு விசிடியில் பார்த்தால் சத்தியமாக புரியாது. தியேட்டரில் பார்த்தால் பாதி புரியும்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev |
|---|



:roll y you didn't explain the story fully?