வழக்கான பாதையில் போய் கொண்டிருக்கும் தமிழ் திரையுலகில் மேலும் ஒரு வழக்கமானப் படம்தான் மாஞ்சாவேலு. தெலுங்கில் சக்கைப்போடு போட்ட லட்சியம் படத்தின் கிட்டதட்ட தழுவலே மாஞ்சாவேலு.
கார்த்திக், போலீஸ் அதிகாரி. அவரது தம்பி அருண்விஜய் தான் படித்த கல்லூரியிலேயே கேண்டீன் நடத்தும் முரட்டு ஆசாமி.
இவர்களது தந்தை விஜயகுமார். அருண்விஜய் கேண்டீன் நடத்தும் கல்லூரியில் மாணவி, நாயகி தண்ஷிகா.அருண்விஜய்க்கும் தண்ஷிகாவுக்கும் சில காட்சிகளிலேயே காதல் மலர்ந்து விடுகிறது.
கதைக்குள் புயலாக நுழைகிறார் பிரபல தொழிலதிபர் வாகை சந்திரசேகர்.அவர் சீட்டு நிறுவன மோசடியில் 100 கோடி ஏப்பம் விடுகிறார். அந்த வழக்கை விசாரிக்கும் பணி கார்த்திக் வசம் வருகிறது. கார்த்திக்கை கொல்கிறார் சந்திரசேகர். தன் அண்ணனை கொன்றவனை, பழி தீர்க்க எரிமலையாக கிளம்புகிறார் அருண்விஜய். அருண்விஜயின் எண்ணம் நிறைவேறியதா என்பது உச்சக்கட்டம்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு கார்த்திக் மறு பிரவேசம் செய்யும் படம் மாஞ்சாவேலு. அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டு திரைப்படத்துக்கு மீண்டும் வந்திருப்பதற்காக பாராட்டலாம். மிடுக்கான காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் மிளிர்கிறார் கார்த்திக். சாகும் காட்சியில் தன் தேர்ந்த நடிப்பால் கலங்க வைக்கிறார் கார்த்திக்.
படத்துக்கு படம் நடிப்பில் தேறி வருகிறார் அருண்விஜய்.ஸ்கைடைவிங்கெல்லாம் மெனக்கெட்டு கற்றுக் கொண்டுள்ளாராம் அருண்விஜய். திரைப்படத் துறை மீது இவ்வளவு ஆர்வம் இருந்தும், அருண்விஜயால் சரியாக ஜொலிக்க முடியாமல் இருப்பது அவரது துரதிருஷ்டமே.சண்டைக் காட்சிகளில் அதிகம் மெனக்கெட்டுள்ளார் அருண்விஜய். கதை தேர்வு செய்வதிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால், முன்னணி நடிகராக வரலாம்.
நாயகி தண்ஷிகா. எங்கேயோ பார்த்த முகம் போல் உள்ளது. நடிப்பு பற்றி குறிப்பிடும் அளவு அவரது கதாபாத்திரம் இல்லை. வண்ணமயமான பாடல்களுக்கு பயன் பட்டுள்ளார்.
சந்தானம், கஞ்சா கருப்பு, ஷகிலா கோஷ்டியினரின் நகைச்சுவை காட்சிகள், படத்திற்கு பெரிய திருஷ்டி பூசணிக்காய்.
மணிஷர்மா இசையில் தெலுங்கு வாடை அதிகம்.
தான் படைப்பது காவியம் அல்ல; ஒரு மசாலா படம்தான் என்பது இயக்குனர் வெங்கடேஷுக்கே தெரியும். அதனால், வழக்கமான கதை, அரத பழசான திரைக்கதை என்பதையெல்லாம் குறிப்பிட்டு அவர் மனதை புண்படுத்த நாங்கள் விரும்பவில்லை.
மாஞ்சாவேலு - மசாலா பொறி
மணியோசை கணிப்பு: 40/100
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



தன்ஷிகாவின் முகம் எங்கேயோ பார்த்த முகம் போல் உள்ளதா? ஏன் நீங்கள் ’பேராண்மை’ படம் பார்க்கவில்லையா? அதில் ஐந்து நாயகிகளில் ஒருவர் தன்ஷிகா.