பத்திரிகை விளம்பரங்களில் சொன்னதை போலவே அடிதடி, ஆபாசம், வெட்டுகுத்து இல்லாத கிளீன் எண்டர்டெயின்மெண்ட் படம் கொடுத்ததற்கு புதுமுக இயக்குனர் மகிழ் திருமேனிக்கு வாழ்த்துகள்.
முன்தினம் பார்த்தேனே படத்தில் பெரிய கதையோ, மெசேஜ்ஜோ கிடையாது.
லண்டனில் இருக்கும் நம்மூர் சாஃட்வேர் பையனின் காதல்களை விவரிப்பதே கதை. இன்றைய இளைஞர்களின் காதலை யதார்த்தமாக சித்தரிக்கும் முயற்சி.
ஹீரோ புதுமுகம் சஞ்சய். சாஃப்ட்வேர் பையன் ரோலுக்கு கச்சிதமான செலக்ஷன். பெரிய ஹீரோயிசமோ, நடிப்போ தேவை படாத ஜாலியான கதையாக இருப்பதால், கொடுத்த ரோலை அலட்டிக் கொள்ளாமல் அனாயசமாக செய்துள்ளார். போக போகதான் தெரியும். இவர் எப்படி நடிப்பார் என்று.. பார்க்கலாம்!
ஒன்றுக்கு மூன்று ஹீரோயின்கள். அவர்களும் புது முகங்களே. சஞ்சய் பற்றிய எழுதிய கமெண்டே இவர்களுக்கும். நடிகை ஏக்தாவின் முகவெட்டு எங்கும் பார்த்திராத மாதிரி வித்தியாசமாக ஒரு தினுசாக உள்ளது. கதையில் ஓரளவு முக்கியத்துவம் இருந்தாலும், நடிப்பில் நிறைய தேற வேண்டும்.
படத்தில் ஓரளவு தெரிந்த நடிகர் சின்னத்திரை நடிகர் சாய்பிரசாந்த்தான். புதுமுகங்கள் பக்கத்தில் நடிக்கும் போதுதான், அவரது அனுபவம் தெரிகிறது. சஞ்சய்யுடன் இவர் வரும் காட்சிகள் கலகலப்பு.
இயக்குனர் மகிழ் திருமேனி. கெளதம்மின் உதவியாளர். காட்சி அமைப்புகளிலும், வசனங்களிலும் கெளதம் சாயல் நிறையவே உள்ளது. உங்களுக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டு சாதிப்பதே, உங்கள் குருவுக்கு நீங்கள் செய்யும் மரியாதையாக இருக்கும். (உங்கள் படத்தை விட, உங்கள் பெயர் இனிமையாக இருக்கிறது. வாழ்த்துகள்..பெயர் வைத்தவர்களுக்கு!!)
தமன் இசை இனிமையாக உள்ளது. வாழ்த்துகள் தமன்.
முன்தினம் பார்த்தேனே - ஜாலியாக குடும்பத்துடன் பார்க்கலாம்!
மணியோசை கணிப்பு: 43/100
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


