maniyosai.com

You are here: Home சினிமா திரைப்பட விமர்சனம் பெண் சிங்கம் விமர்சனம்

பெண் சிங்கம் விமர்சனம்

E-mail Print
Share/Save/Bookmark

pen singam

மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற தலைவலிகளை மறந்து, ஒரு திரைப்படம் சென்று பொழுதைப் போக்க நினைப்பவர்கள் நிச்சயம் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளிவந்திருக்கும் ‘பெண் சிங்கம்’ படத்துக்கு செல்லலாம்.

பராசக்தி,மனோகரா போன்ற கலைஞரின் படங்களை ‘மறக்க முடியுமா’? அந்தப் படங்களுக்கு வசனம் எழுதும் போது கலைஞருக்கு இருந்த தமிழ் ஆளுமையும், வேகமும் இன்னும் குறையவில்லை.

 

சொல்லப் போனால், வசனங்களின் இளமை இன்னும் கூடியிருக்கிறது.

வனத் துறை அதிகாரி உதய்கிரண். அவரது தாய் ரோகிணி ஒரு நீதிபதி. உதய்கிரணுடன் வேலை பார்க்கும் ஏழை பெண்ணான மீரா ஜாஸ்மின் ஐபிஸ் படிக்க ஆசை படுகிறார். அதற்கு உதய்கிரண் உதவுகிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது.

உதய்கிரண் வேலை செய்யும் ஊரில் மரங்களை சட்ட விரோதமாக வெட்டி கடத்தி வரும் தொழிலை செய்து வருகிறார் ராதாரவி.அதை, நியாயமான அதிகாரியான உதய்கிரண் கண்டிக்கிறார். இருவருக்குள்ளும் மோதல் ஏற்படுகிறது.

இது ஒரு புறமிருக்க, உதய்கிரணின் நண்பர் ரிச்சர்ட் பெண் விடுதலை பற்றி மேடைகளில் பேசி வருகிறார். அவர் பேச்சைக் கேட்டே (பேச்சைக் கேட்டே நம் மக்கள் ஏமாந்ததை போல!) அவரைக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார் சுதர்சனா சென். திருமணத்துக்கு பிறகே, ரிச்சர்டின் உண்மையான முகம் தெரிகிறது. இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய நினைக்கிறார், இருவருக்கும் பொது நண்பரான உதய்கிரண். சுதர்சனா சென் திடீரென சுட்டுக் கொல்லப் பட கொலை பழி உதய்கிரண் மீது விழுகிறது. உதய்கிரண் கைது செய்யப் படுகிறார்.

இதற்கிடையே மீரா ஜாஸ்மின் ஐபிஎஸ் அதிகாரி ஆகி விடுகிறார்.உதய்கிரண் வழக்கை விசாரிக்க மீராஜாஸ்மின் நியமிக்கப் படுகிறார்.உதய்கிரண் தாய் ரோகிணியும் தன் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு, மகனுக்காக வழக்கறிஞராகி வாதாடுகிறார்.

இந்தப் பெண் சிங்கங்களால், நிரபராதியான உதய்கிரணைக் காப்பாற்ற முடிந்ததா என்பதே கதை.

pen singamஉதய்கிரண், துடிப்பான வன அதிகாரி கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். தெலுங்கு நடிகரான இவர், தமிழில் பாலசந்தர் இயக்கத்தில் பொய் என்ற படத்தில் ஏற்கனவே நடித்துள்ளார். பாலசந்தரின் பார்வை பட்டவர்கள் சோடை போக மாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளார் உதய்கிரண்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கதாநாயகிக்கும் சொல்லிக் கொள்ளும் அளவு கதாபாத்திரம் ‘பெண் சிங்கம்’ படத்தில். மீரா ஜாஸ்மின் தேர்ச்சி பெற்றுள்ளார்.

எதிர்மறையான கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் மிளிர்கிறார்.

ஜே.கே.ரித்தீஷும், ரம்பாவும் கெளரவ வேடத்தில் வருகிறார்கள். வழக்கறிஞராக ரித்தீஷ் தோன்றும் காட்சிகள் சிறப்பு.

ராதாரவி, வாகை சந்திரசேகர், ரித்தீஷ் போன்ற திமுக அனுதாபிகளுக்கே பெரும்பான்மையான வாய்ப்பு அளிக்கப் பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம்.

தேவாவின் இசையில் பாடல்கள் உண்மையாகவே தேனிசை. கலைஞர் எழுத்தில் உருவான,”வீணையில் எழுவது வேணு கானமோ” பாடல் இனிமை.

இனிய தமிழில் வசனங்களைக் கேட்டு வெகு நாட்கள் ஆகின்றன. நகைச்சுவை உணர்வோடும், குறும்போடும் வசனங்களில் ராஜாங்கம் செலுத்தியுள்ளார் கலைஞர். ஆனால், தமிழில் வசனம் இருப்பது என்னவோ சரிதான். ஆனால், பல இடங்களில் விடாப்பிடியாக தமிழிலேயே பேசுவது செயற்கையாக உள்ளது.

கலைஞரின் கதை,வசனம் சிறப்பாக இருந்தும், திரைக்கதையிலும்,காட்சி அமைப்பிலும் இயக்குனர் பால ஸ்ரீரங்கம் அதிக கவனம் செலுத்தாதது துரதிருஷ்டமே.


இந்தப் படம் 30 ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தால் இன்னும் வெகுவாக ரசித்திருக்கலாம்.

பெண் சிங்கம் - வசனங்களுக்காக ஒரு முறை பார்க்கலாம்.

மணியோசை கணிப்பு - 40/100

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (3)
  • gomathyvinayagam

    Thank you for this unbiased review

  • Narayan

    Pen Singam better than Singam

  • da$$

    ///மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற தலைவலிகளை மறந்து, ஒரு திரைப்படம் சென்று பொழுதைப் போக்க நினைப்பவர்கள் நிச்சயம் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கதை, வசனத்தில் வெளிவந்திருக்கும் ‘பெண் சிங்கம்’ படத்துக்கு செல்லலாம்.///

    Typical Maniyosai punch

Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Saturday, 05 June 2010 17:01 )  


More and More


கிட்டதட்ட

31 March 2012, 18.13 செய்திகள்
மின் கட்டண உயர்வு : கருணாநிதி கண்டனம்
சென்னை: மின்சார கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியிருப்பதற்கு திமுக...மேலும்...
0 Comments , 120 Hits
25 January 2012, 12.50 பொது கட்டுரைகள்
யார் இந்த மக்கள் நலப் பணியாளர்கள்?
இரண்டு மாதங்களாக தினமும் செய்திகளில் மக்கள் நலப் பணியாளர்கள் என...மேலும்...
0 Comments , 299 Hits
03 May 2012, 17.37 தலைப்புச் செய்திகள்
புதுக்கோட்டையில் போட்டி இல்லை : கருணாநிதி அறிவிப்பு
சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுக போட்டியிடப் போவதில்லை என...மேலும்...
0 Comments , 42 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 456 Hits