maniyosai.com

You are here: Home சினிமா திரைப்பட விமர்சனம் சுறா விமர்சனம்

சுறா விமர்சனம்

E-mail Print
Share/Save/Bookmark

Suraவிஜய் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப் பட்ட திரைப்படம் சுறா. அரசியலுக்கு வருவாரா, முதல்வர் ஆவாரா போன்ற பல எதிர்பார்ப்புகள் விஜயை சுற்றி இருக்கும் சமயத்தில் வெளிவந்திருக்கும் படம் சுறா. அதுவும் அவரது 50வது படமாக இருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு ஏகப் பட்ட குஷி.

யாழ் நகர் என்ற மீனவர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் விஜய். யாழ் நகர் மீனவர்களுக்கு செல்லப் பிள்ளை. தான் ஆசையாக வளர்த்து வந்த நாய் குட்டி செத்துப் போன துக்கம் தாங்காமல் தற்கொலைக்கு முயல்கிறார் தமணா. அவரை, நம் தமிழ் சினிமா விதிப்படி விஜய் காப்பாற்றுகிறார்.

அடுத்து என்ன? அஃதே, காதல்தான்! ஜாலியாக வாழ்க்கை போகும் போது, பிரச்சினை அராஜக அரசியல்வாதி மூலமாக வருகிறது. மீனவர்களுக்கு சொந்தமான நிலங்களை, கையகப் படுத்த நினைக்கிறார் அரசியல்வாதி. விஜய் சும்மா விடுவாரா? கொந்தளித்து எழுகிறார். எதிரியை தனியாக நின்று சந்திக்கிறார். அராஜக அரசியல்வாதியும், தன் பங்குக்கு ஆள் அம்பு சேனையுடன் விஜயை ஒழிக்க நினைக்கிறார். கிளைமேக்ஸ் என்னவாக இருக்கும் என்பது நாங்கள் சொல்லியா தெரிய வேண்டும்.

விஜய் வழக்கம் போல சுறுசுறுப்பாக இருக்கிறார். படம் நெடுக, காதலிக்கிறார், சண்டை போடுகிறார், காமெடி பண்ணுகிறார். மொத்தத்தில் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக மின்னுகிறார் விஜய்.

அவர் பேசும் அதிரடி பஞ்ச் வசனங்களுக்கு தியேட்டரில் விஜய் ரசிகர்களிடம் பலத்த கரகோஷம். வடிவேலுவுடன் விஜய் அடிக்கும் லூட்டி சூப்பர்.

தமணாவுடன் விஜய் சேர்ந்து நடிக்கும் முதல் படம் சுறா. விஜய்க்கு இணையாக அவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால், ரசிகர்களுக்கு பொழுதுபோக்குக்கு குறைவில்லை. தமணா நடிப்பை பற்றியோ, கதாபாத்திரம் பற்றியோ சொல்ல எதுவும் இல்லை. வழக்கமான தமிழ் பட ஹீரோயின்.

வெறும், விஜய் ரசிகர்களுக்கான படமாக இல்லாமல் அனைவரும் ரசிக்கும் படமாக சுறாவை ஆக்கியிருப்பது வடிவேலு. போகிற போக்கை பார்த்தால் ரசிகர்களின் ஆதரவுடன் வடிவேலுவே முதல்வர் ஆகி விடுவார் போல! அம்புட்டு ரசிகர்கள் ஆரவாரம்.

மணிசர்மா இசையில் பாடல்கள் அதிரடியாக கவர்கின்றன.

சுறா - அனைவருக்குமான படம்

மணியோசை கணிப்பு: 42/100




Want to write for Maniyosai?

Download our android app


Comments (11)
  • உண்மை விளிம்பி

    கவர் கொடுத்தாங்களா? இந்த மொக்கை படத்தை பாராட்டி எழுதியிருக்கீங்க...

  • Francis

    Super. Vijay is our super star.

  • loose mohan  - படமாடா இது தூ

    படமாடா இது தூ
    :? :cry :( :x :roll :eek :upset :zzz :sigh

  • Anonymous

    நல்ல படங்களையும் திட்டி எழுதும் இணையதளத்தில், இந்த டப்பா படத்தை பாராட்டி எழுதியுள்ளது ஏனோ?!?

  • Anonymous

    ”சுறா - அனைவருக்குமான படம்”

    காசு கொடுத்தா இதுவும் எழுதுவ, இன்னும் எழுதுவ

Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

09 January 2012, 21.28 சினிமா செய்திகள்
பொங்கல் ஸ்பெஷல் : சன் டி.வி.யில் எந்திரன்
சென்னை: பொங்கல் நாள் சிறப்பு திரைப்படமாக எந்திரன் திரைப்படத்தை...மேலும்...
0 Comments , 162 Hits
01 April 2012, 18.06 தலைப்புச் செய்திகள்
2ஜி வழக்கில் தயாநிதி மாறன் சிறைக்கு செல்வார் : சுப்ரமணிய சுவாமி
திருநெல்வேலி: 2ஜி வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி...மேலும்...
0 Comments , 90 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 456 Hits