maniyosai.com

You are here: Home சினிமா சினிமா பார்ப்பது எப்படி சினிமா பார்ப்பது எப்படி-பகுதி 5

சினிமா பார்ப்பது எப்படி-பகுதி 5

E-mail Print
Share/Save/Bookmark

Gilliஇன்று வரும் பெரும்பாலான படங்களில் கதையே இருப்பதில்லை அப்படியேத் தப்பித் தவறி கதை என்று ஏதேனும் ஒன்று ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருந்தாலும் அந்தப் படம் வெற்றியடைவதில்லை காரணம் நல்ல கதை மட்டுமே ஒரு படத்திற்கு வெற்றியைத் தேடித் தந்துவிடாது, சிறு கதைகளுக்கும், நாவல்களுக்கும் கதை மட்டுமேப் போதுமானது.

’அவன் மிகவும்  நல்லவன்’  எனக் கதையில் சொல்லிவிடலாம், ஆனால் சினிமாவில் அவன் நல்லவன் என புரியவைக்க காட்சிகள் வேண்டுமல்லவா? அந்த காட்சிகள் ஒரு முறையற்று  இருந்தால் டிவி சேனலில் வரும் சூப்பர் சீன்ஸ் நிகழ்ச்சியைப் போலாகி விடும்.    சினிமாப் பார்ப்பவர்களை குழப்பாமல் கொஞ்சம் கொஞ்சமாக காட்சிகள் மூலம் கதையை விளக்கவேண்டும். படம் பார்க்கும் நமக்கு முடிவு என்ன என்பது முதலிலேயேத் தெரிந்தால் சுவையிருக்காது. ஆனால் திரைக்கதை எழுதுபவருக்கு படத்தின் முடிவு என்பது முதல் காட்சி எழுத உட்காருவதற்கு முன்பே தெரிந்திருக்க வேண்டும். என்ன சொல்ல வருகிறோம் எனத் தெளிவாக இருந்தால் காட்சிகளும் குழப்பமில்லாமல் தெளிந்த நீரோடையாக இருக்கும். 

சாதாரணமாக நாம் சினிமாவில் first half (இடைவேளைக்கு முன்பு) second half (இடைவேளைக்குப்பின்) உண்மையில் திரைக்கதையில் மூன்று பாகங்கள் உண்டு. ஆரம்பம், நடு, முடிவு என மூன்றுப் பகுதிகளாகப் பிரித்து கதையை சொல்ல வேண்டும.

முதல் பாகத்தில் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள், அவர்களுக்குள் என்ன உறவு முறை அவர்களின் குணாதிசயங்கள் எல்லாம் முதல் 45- 50 நிமிடங்களுக்குள் சொல்லி விட வேண்டும். படம் முழுக்க நினைத்து நினைத்து ஏதாவது ஒரு கேரக்டர் முளைத்துக் கொண்டிருந்தால் மக்கள் மந்திரித்து விட்டதுப் போலாகி விடுவார்கள்.

முதலில் கதாப்பாத்திரங்களையும் அவர்களது குணங்களையும் சொல்லியப் பிறகு அவர்களுக்கு என்ன பிரச்சினை  என சொல்ல வேண்டும். அதுதான் படத்தின் முக்கியமான திருப்புமுனை. அங்குதான் முக்கியக்கதையே ஆரம்பமாகும், அதை plot point என்று சொல்வார்கள், இது படம் ஆரம்பித்து 45-50 நிமிடத்தில் வந்து விட வேண்டும். பல வெற்றிப் படங்களைப் அலசிப் பார்த்தால் இதை நீங்களே உணர்வீர்கள்.

உதாரணமாக ’கில்லி’ படத்தை எடுத்துக் கொள்வோம், முதலில் கதாநாயகன், அவன் அப்பா, அம்மா, தங்கை, நண்பர்கள்  அவர்களது குணங்கள் எல்லோரையும் அறிமுகப் படுத்தியாயிற்று, ஹீரோ கபடி ஆர்வத்தால் வீட்டில் பொய் சொல்லி விட்டு மதுரையில் போட்டியில் கலந்துக் கொள்ள செல்கிறான். மதுரையில் கதாநாயகி குடும்பம், வில்லனின் மூர்க்கத்தனம் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். யார் யார் எப்படி என நன்கு புரிந்து விட்டது. பல படங்களைப் பார்த்து நாம் அனுபவப்பட்டிப்பதால் மதுரையில் கதாநாயகிக்கு பிரச்சினை கதாநாயகன் யதார்த்தமாக மதுரை வந்துள்ளான் என்றதுமே ஹீரோ நாயகிக்கு எந்த வகையில் உதவப் போகிறான் இருவரும் எப்படி சந்திக்கப் போகிறார்கள் என நாம் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவோம்.

கில்லி படத்தில் முதன்முதலாக விஜய், திரிஷாவை சந்தித்து பிரகாஷ்ராஜிடம் இருந்து காப்பாற்றுவதுதான் படத்தின் plot point,  யோசித்துப் பாருங்கள்!  அங்கிருந்து தானே கதை ஆரம்பிக்கிறது? மதுரைக் கோயிலுக்கு முன் நடக்கும் இந்த காட்சி படம் ஆரம்பித்து சரியாக 45-50 நிமிடத்தில் இடம்பெறும்.

இதுப்போல இன்னும் சில வெற்றிப்படங்களை அலசிப் பாருங்கள், ’முதல்வன்’ படத்தில் ரிப்போர்ட்டர் புகழேந்தி முதலமைச்சரை பேட்டியெடுக்கும் காட்சிதான் படத்தின் plot point இதுவும் படம் ஆரம்பித்து 45 நிமிடங்களில் வரும்.

இந்தியாவின் சிறந்த திரைக்கதை எழுத்தாளராகக் கொண்டாப்படும் இயக்குனர் கே.பாக்யராஜ் அவரது திரைப்படங்களிலும் இந்த ஃபார்முலாவை நன்கு கவனிக்கலாம்.

இது ஆரம்பப் பகுதி இன்னும் நடுப்பகுதி மற்றும் முடிவு என மேலும் இரண்டு பாகங்கள் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்த பார்முலாவில் விதிவிலக்குகளும் உண்டு. கதைக்கு ஏற்றாற் போல சினிமாவின் பல  அம்சங்களை வரும் வாரங்களில் பார்ப்போம். 






Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 456 Hits