மணியோசை.காம் இணைய இதழுக்கு வாசகர்கள் கதை, கவிதை, கட்டுரை, புகைப்படங்கள் ஆகிய படைப்புகளை அனுப்பலாம்.
படைப்புகள் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ மட்டுமே இருக்க வேண்டும். மணியோசை.காம் தமிழ் இணையதளம் என்பதால் தமிழ் படைப்புகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப் படும். நீங்கள் ஆங்கிலத்தில் அனுப்பும் படைப்பு மிகவும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அது பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படும்.
எப்படி எழுதுவது:
மணியோசை.காம் இணைய இதழுக்கு எழுத நீங்கள் பெரிய எழுத்தாளராக இருக்க வேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை. நீங்கள் படைப்புகளை எழுத, தமிழில் அடிப்படை ஆர்வமும், நீங்கள் சொல்ல வருவதை குழப்பம் இல்லாமல் வரிகளாக வடிக்க தெரிந்தாலும் போதுமானது.
மற்ற பிரபல எழுத்தாளர்களின் பாணியில் எழுத வேண்டும் என்றெல்லாம் நினைத்து சிரமப் படாமல், தங்களுக்கே ஒரு தனி நடையை உருவாக்கிக் கொண்டு எழுதுவது சிறப்பு.
நீங்கள் தமிழில் எழுதும் படைப்புகளை எங்களுக்கு மின்னஞ்சல் செய்ய விரும்பினால், கட்டாயமாக தமிழ் யூனிகோட் எழுத்துறுக்களையே (Tamil Unicode Characters) பயன் படுத்த வேண்டும். நீங்கள் யூனிகோட்டில் எழுதாமல் இருந்தால், உங்கள் படைப்புகளில் இருக்கும் எழுத்துக்கள் எங்களுக்கு சிறு சிறு பெட்டிகளாகவோ , கேள்விக் குறிகளாகவோ வந்து அடையும். அதை பிரசுரிப்பது இயலாத காரியம் ஆகி விடும்.
யூனிகோட் மென்பொருளை நீங்கள் இணையதளங்கள் மூலமாக சுலபமாக Download செய்துக் கொள்ளலாம். NHM Writer, Kural என யூனிகோட் தமிழில் தட்டச்சு செய்ய பல மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
நீங்கள் எழுதும் படைப்பை, MS Word (அ) Wordpad (அ) Notepad ஆகியவற்றில் தட்டச்சு செய்து, அந்தக் கோப்பை மின்னஞ்சலுடன் இணைத்து எங்களுக்கு அனுப்பலாம்.
கணிணியில் தட்டச்சு செய்ய தெரியாதவர்கள், தங்கள் படைப்புகளை தெளிவான கையெழுத்துடன் கையால் எழுதி, எங்களுக்கு ஃபேக்ஸ் மூலமாக அனுப்பலாம்.
நீங்கள் எழுதும் படைப்பை தொகுக்கவும், சிற்சில மாறுதல்கள் செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.
தாங்கள் அனுப்பும் படைப்புகள், வேறு எந்த பத்திரிகைகளிலோ, இணையதளங்களிலோ அல்லது தங்களுக்கே சொந்தமான இணையதளத்திலோ, பிளாக்கிலோ (Blog) வெளி வந்திருக்க கூடாது.
தாங்கள் அனுப்பும் படைப்புகளை அதிகபட்சம் 60 நாட்களில் மணியோசை.காம் இணைய இதழில் பிரசுரித்து விடுவோம். தங்கள் படைப்புகள், 60 நாட்கள் ஆகியும் பிரசுரம் ஆகவில்லை என்றால், தங்களது படைப்பு பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படவில்லை என நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@maniyosai.com
ஃபேக்ஸ் எண்: 91 (80) 30723682
Want to write for Maniyosai?
Download our android app
Contributions

