இந்திய அரசியல் தலைவர்கள் பரபரப்பாக அறிக்கை வெளியிடவும், தொழில் வல்லுனர்கள் ஆராயவும், எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் அவசர அவசரமாய் கட்டுரை எழுதி தொடரும் விபரீதங்களை அடிகோடிட்டுக் காட்டி எச்சரிக்கவும் இன்னொரு சம்பவம் நிகழ்ந்துவிட்டது. ஆனால் இந்த ஆரவாரங்களெல்லாம் சிறிது நாட்களிலேயே அடங்கிவிட்டு மீண்டும் இதுப்போன்ற விபத்துகள் ஏதேனும் நடக்கும்போதுதான் மீண்டும் அரங்கேற ஆரம்பிக்கிறது.
இப்போதைய லேட்டஸ்ட் இழப்பு ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் ஹெலிகாப்டர் விபத்து.
ஹெலிகாப்டர் விபத்துகள் இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. பல ஆண்டுகளாகவே நடந்துவந்தாலும் கடந்த பத்து ஆண்டுகளில் சற்று அதிகமாகவே இருக்கிறது.
எஸ். குமாரமங்கலம்:
காங்கிரஸ் தலைவர் எஸ். குமாரமங்கலம் 1973ல் புது டெல்லி அருகே விமான விபத்தில் இறந்தார்.
சஞ்சய் காந்தி:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகனும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தம்பியுமான சஞ்சய் காந்தி 1980 ல் டில்லி சப்தர்ஜங் விமான நிலையத்திலிருந்து விமானம் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார்.
மாதவராவ் சிந்தியா:
மூத்த காங்கிரஸ் தலைவர் மாதவராவ் சிந்தியா 2001ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி கான்பூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள செல்லும் வழியில் விமான விபத்தில் பலியானார்.
ஜி.எம்.சி. பாலயோகி:
2002ல் லோக்சபா சபாநாயகரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான ஜி.எம்.சி. பாலயோகியும் விமான விபத்துகளில் இறந்தவர்களில் ஒருவர்.
ஓம் பிரகாஷ் ஜிண்டால்:
பிரபலத் தொழிலதிபரும், ஹரியானா மாநில அமைச்சருமான ஓம் பிரகாஷ் ஜிண்டால் (ஓ.பி.ஜிண்டால்) உத்தரபிரதேச மாநிலத்தில் 2005ம் ஆண்டு விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இதற்கிடையே 2004ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பாரதீய ஜனதா கட்சியின் பிரசாரத்திற்கு செல்லும் வழியில் பிரபல நடிகை செளந்தர்யா ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதில் அகால மரணமடைந்தார்.
இது விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை மட்டுமே. விபத்து ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியர்வர்களின் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் அஹமது படேல், மத்திய மந்திரி பிரித்விராஜ் ஜோஹன், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
வர்த்தக விமானங்களை விட ஹெலிகாப்டர்களில் பாதுகாப்பு குறைவு மற்றும் விபத்து சதவீதமும் அதிகம் என்பது ஒருபுறமிருக்க ஹெலிகாப்டர் மற்றும் சிறிய ரக விமான ஓட்டுனர்கள் வெளியே பார்க்க இயலாதப் போதும், இயந்திரங்களின் எச்சரிக்கைகளை விட தான் கண்களால் பார்ப்பதையே அதிகம் நம்பி விமானத்தை ஓட்டுவது மிகவும் தவறு என்று வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.
பாதுகாப்பு என்ற பெயரில் ஐம்பது நூறு கார்கள் புடைசூழ செல்லும் அரசியல்வாதிகள், மனுக் கொடுக்க வரும் அப்பாவி மக்களைக் கூட கிட்ட நெருங்க விடுவதில்லை. இப்படியிருக்கையில் விபத்திற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கும் ஹெலிகாப்டர்களை ஏன் அதிகம் பயன்படுத்துகின்றனர்? அதுவும் ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் பறக்கவேத் தகுதியற்றது என்று வேறு கூறுகிறார்கள். தன் பாதுகாப்புக்காக மட்டும் பல கோடிகளை செலவழிக்கும் அரசியல்வாதிகள் ஏன் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டுகிறார்கள் என்பது கேள்விக்குறியே.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev |
|---|




