You are here: Home பொது ஹெல்த் ப்ளஸ் ஹெல்த் ப்ளஸ்- உயிர்னா வெல்லமல்ல...தேன்!

ஹெல்த் ப்ளஸ்- உயிர்னா வெல்லமல்ல...தேன்!

E-mail Print PDF
User Rating: / 4
PoorBest 

’இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...’ன்னு புரட்சிகவி மட்டுமல்லாம ‘தேன் தேன் தேன்...’னு இன்றைய இளம் காதலர்கள் வரைக்கும் தேனுக்கு அத்தனை முக்கியத்துவம் தர்றாங்கன்னா சும்மா இல்லீங்க. தேனுக்கு எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள்லாம் இருக்கு. அத முழுசாத் தெரிஞ்சிக்கிட்டீங்கன்னா நீங்களே
’இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...’ன்னு பாட ஆரம்பிச்சிடுவீங்க.


# தேன்ல ஒரு வசதி என்னன்னா அத அப்படியேவும் சாப்பிடலாம் இல்ல வேற எதோட வேணும்னாலும் கலந்து சாப்பிடலாம். பிரெட்டுக்கு ஜாம் மாதிரியும் தொட்டு சாப்பிடலாம் இல்ல ஜூஸோடக் கலந்தும் குடிக்கலாம். வெறும் தண்ணிலக் கூட கலந்து குடிக்கலாம்.
சுருக்கமா சொல்லப் போனா நாம சர்க்கரைக்கு பதிலா தேன் உபயோகிக்கலாம்.



# சர்க்கரைய ’விட்டமின் திருடன்’னு சொல்றதுண்டு. இனிப்புக்காக சர்க்கரையப் பயன்படுத்தினா அது அந்த உணவுப் பொருள்ல இருக்குற சத்துக்கள அழிச்சிடும். ஆனாத் தேன் அப்படியில்ல. இனிப்பையும் கொடுக்கும் அதோட குணங்களையும் மாத்தாது. அதனாலதான் சில கசப்பான மருந்துகள தேன்ல கலந்து சாப்பிட சொல்லி டாக்டர்ஸ் அட்வைஸ் பண்றாங்க.

# தேன் சாப்பிட்டா உடனடியா எனர்ஜிக் கிடைக்கும். ஒரு டேபிள் ஸ்பூன் தேன்ல 64 கலோரி இருக்கு ஆனா ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரைல 50 கலோரிதான் இருக்கு.

# சர்க்கரைய விட தேன்ல கலோரி அதிகமா இருக்கும்னா அப்ப வெயிட் போட்டுடுமேன்னு அலர்றீங்களா? வெயிட்...வெயிட்... அவசரப்படாதீங்க. அதுக்கு மாறா தேன்ல கொழுப்பக் குறைக்கிறத் தன்மை நிறையவே இருக்கு. நம்ம உடம்புல கொழுப்பு ஒருத் தேவையில்லாத சத்தா தேங்கிக் கிடக்கு. வெதுவெதுப்பானத் தண்ணில ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டா தேங்கிக் கிடக்கிற அந்த கொழுப்ப தேன் ஃபுட்பால் விளையாட ஆரம்பிச்சுடும். அதனால கொழுப்பு கரைக்கப்பட்டு உடம்புக்கு தேவையான சத்தா மாறிடுது. கொழுப்பு கரையறதால ஸ்லிம்மாவும் ஆய்டுவோம்; அது சக்தியா உருமாறதால சுறுசுறுப்பாவும் இருப்போம். இந்த காரணத்துக்காகவே நிறையப் பேரு காலையில எழுந்தோன முதல் வேலையா எலுமிச்சம்பழ சாறோடு தேன் கலந்து சாப்பிடறாங்க.

#சர்க்கரைல கலோரி அதிகமா இருக்கறதனால மட்டும் வெயிட் போடறது இல்லீங்க. சர்க்கரைய ஜீரணம் செய்ய நம்ம உடம்புல ஏற்கெனவே இருக்கற விட்டமின் மற்றும் மினரல்கள் தேவைப்படுது. அதனால இருக்கற சத்தும் கரைஞ்சுப் போய்டறதுனால புடலங்கா மாதிரி இருந்தவங்களும் பூசணிக்காய் மாதிரி ஆகிடறாங்க. ஆனா இந்த தேன்ல பாருங்க, அதுலயே எக்கச்சக்கமான விட்டமின் மற்றும் மினரல்கள் இருக்கு. தேன் ஏற்கெனவே தேனிக்களால ஜீரணிக்கப்பட்ட ஒரு பொருள் ங்கிறதால சீக்கிரமா ஜீரணமும் ஆயிடும். அதனால ஜீரண சக்திக் குறைவா உள்ளவங்க கூட தைரியமா தேன் சாப்பிடலாம்.

# தினமும் குளிக்கறதுக்கு முன்னாடி தேனும் பாலும் கலந்து உடம்புலப் பூசிக் கொஞ்ச நேரம் கழிச்சுக் குளிச்சுப் பாருங்க. உங்க சருமம் மிருதுவா ஆகி தனிப் பொலிவு ஏற்பட்டு நீங்க அழகுல ஐஸ்வர்யா ராயவே மிஞ்சிடுவீங்க போங்க. அட அதுக்குள்ள தேன் வாங்கக் கிளம்பிட்டீங்களா? மிச்சத்தையும் படிச்சிட்டு போங்க.

#தேன் நல்ல கிருமிநாசினியும் கூடத் தெரியுமா? காயம் ஆறக் கூட தேனப் பயன்படுத்தலாம். இப்ப சில ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கறவங்க சீக்கிரமே குணமடைய தேன் உபயோகிக்கறதுப் பத்தி யோசிச்சிட்டு இருக்காங்களாம்.

 

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:):grin;)8):p:roll:eek:upset:zzz:sigh
:?:cry:(:x
Last Updated ( Saturday, 30 January 2010 21:02 )  


More and More


தொடர்புள்ள சில கட்டுரைகள்

தொடர்புடைய கட்டுரைகள் எதுவும் இல்லை.


நித்தியானந்தா ஆபாச வீடியோவை ஒளிப்பரப்பிய ஊடகங்களின் போக்கு

Banner
PROMO
Banner
Maniyosai Ad

ஹெல்த் ப்ளஸ்

பொது - ஹெல்த் ப்ளஸ் - மருத்துவ கட்டுரைகள்
ஹெல்த்
ப்ளஸ்-நல்லா தூங்க 7 டிப்ஸ்

admin - Wednesday, 06 January 2010
sleepதூக்கம் வராம இருக்கறதுதான் இன்னிக்கு பல பேரோட பிரச்சினையே. ரொம்ப ஓவரா தூங்கி வழியறது ...மேலும்...
பொது - ஹெல்த் ப்ளஸ் - மருத்துவ கட்டுரைகள்
ஹெல்த்
ப்ளஸ் - அண்ணாசி பழம்...

admin - Tuesday, 05 January 2010
pineappleஅண்மையில் எங்களுக்கு வந்த ஒரு மின்னஞ்சல் எங்களை திடுக்கிட வைத்தது. அந்த பகீர்  மெயிலின்...மேலும்...
பொது - ஹெல்த் ப்ளஸ் - மருத்துவ கட்டுரைகள்
ஹெல்த்
ப்ளஸ்-நலம் வாழ 9 வழிகள்

admin - Tuesday, 05 January 2010
enjoy# உடற்பயிற்சி முக்கியம்: வேலை கொடுக்காம இருந்தா உடலும் பழைய இரும்பு மாதிரி துரு ...மேலும்...
Banner
Maniyosai Ads

Countdown

தெலுங்கு புத்தாண்டுக்கு இன்னும்
உள்ளன