maniyosai.com

You are here: Home பொது ஹெல்த் ப்ளஸ் ஹெல்த் ப்ளஸ் - கோடையை சமாளிக்க சில வழிகள்

ஹெல்த் ப்ளஸ் - கோடையை சமாளிக்க சில வழிகள்

E-mail Print
Share/Save/Bookmark

summerகோடை காலம் வந்தாலே குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். 2 மாதம் பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விடுவார்களே, ஜாலியாக டூர் கிளம்பலாம், வாரகடைசியில் தீம் பார்க் போகலாம், நேரம் காலம் இல்லாமல்,உச்சி வெயிலில் கூட, ரோட்டில் நின்று கிரிக்கெட் ஆடலாம், ஆனால், இந்த வேகாத வெயிலை நினைத்தால்தான், அனைவருக்கும் கவலை வந்து விடுகிறது.வெயில் அடிக்கிறது என்பதற்காக நம் சந்தோஷங்களை குறைத்துக் கொள்ள முடியுமா? இயற்கை, அதன் வழியில் போனால், நாம், நம் வழியில் போகதானே வேண்டும்!

இந்த கோடையிலும், நம் வாழ்வில் வசந்த தென்றல் வீச சில எளிய வழிகள்;

(1)  தண்ணீர்...தண்ணீர் ;
தண்ணீரை விட, கோடையை சமாளிக்க வேறு மருந்து இல்லை. வஞ்சனையில்லாமல் நிறைய தண்ணீர் பருகுங்கள்.இதனால், நம் உடலில் இருக்கும் நீர் வரண்டு போகாது. ஆனால், ஒன்று. குடிக்கும் நீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். மலிவு விலை தண்ணீர் பாக்கெட்டுகளை உபயோகிக்காமல் இருப்பது நலம்.

(2) தளர்வான ஆடைகளை அணியுங்கள்;
கோடைமுடியும் வரை முடிந்த அளவு தளர்வான ஆடைகளையே அணியுங்கள். காட்டன் துணிகளை அணிவது சிறப்பு. கறுப்பு நிற ஆடைகள், வெப்பத்தை இழுக்கும் தன்மை உடையதால், அவற்றை தவிர்ப்பது நல்லது.

(3) இளநீர், மோர் பருகுங்கள்;
கோக், பெப்சி போன்ற குளிர் பானங்களை தவிர்ப்பது நல்லது. தினமும் ஒன்று அல்லது இரண்டு இளநீர் குடிக்கலாம்.மோர் குடிப்பதும் நல்லது. கெட்டி தயிர் உடலுக்கு சூடு கொடுக்கும் என்பதால்,அதை கோடை முடியும் வரை தவிர்த்து விடுங்கள்.

(4) 2 தடவை குளியுங்கள்;
நாட்டில் இருக்கும் தண்ணீர் பற்றாக்குறைக்கு, இது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் வெயிலை சமாளிக்கும் best வழி     இது தான். காலை, மாலை இரண்டு  வேளைகளும் பச்சை தண்ணீரில் குளிப்பது உடல் சூட்டை தணிக்கும்.

(5) எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள்;
வாரம் ஒரு முறையாவது, தலைக்கு எண்ணெய் தடவி, தலைக்கு குளிப்பது நல்லது.

இவையெல்லாம், காலம்காலமாக தெரிந்த விஷயங்கள்தான், இருந்தாலும், நல்ல விஷயங்களை மீண்டும் சொல்வதில் தவறில்லைதானே!




Want to write for Maniyosai?

Comments (4)
  • gobu  - water

    You had specified that dont use cheap rate water pocket.
    Where the costly water pockets available. please explain.

    The water pockets have the ISI mark and certified one.
    But you had advised do not use it.
    Totally ISI products are fraud one. :?
    I want clarification regarding this.
    :?

  • Ashok

    Even duplicate medicines are sold these days. Do you think selling a water pocket with duplicate ISI mark is difficult :?

  • Gobu

    Dear ashok

    Water is important to living
    A poor (or) middle cla$$ man standing in a bus stand
    He need water for his thirst
    The branded Bottled water cost Rs.15/-
    A water pocket cost Rs.1/-
    Which is possible.

    Another point
    Water pockets are sold cheaply
    So there is no chance to misuse

    The higher profit and valuable items are only duplicate and
    they try to earn more.

    My point of view
    Without drinking of water, the man go to die
    but drinking water without quality
    nothing will happens.
    A pocket water not kills a man
    and no complaint regarding drinking of pocket water.

    gobu :?

Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

உடல் எடை வழிகாட்டி

உயரம்

உடல் எடை



இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits