# உடற்பயிற்சி முக்கியம்: வேலை கொடுக்காம இருந்தா உடலும் பழைய இரும்பு மாதிரி துரு பிடிச்சிடும். உடற்பயிற்சினு ஜிம்முக்கெல்லாம் போகனும்னு அவசியம் இல்லை.
ஒரே இடத்துல தேமேனு உட்காராம ஓடி ஆடி வேலை செஞ்சா போதும். லிஃப்ட்க்கு பதிலா மாடி படில ஏற பழக்கம் பண்ணி பாருங்களேன். வீட்லயே சிம்பிளான புஷ் அப்ஸ், டம்பிள்ஸ் போன்ற உடற்பயிற்சியும் முயற்சி பண்ணி பார்க்கலாம்.
# கொழுப்பை குறைங்க: இது ரொம்பவே முக்கியமான பாய்ண்ட். சாப்பாடு சாப்பிட சோம்பேறி தனம் பட்டுக்கிட்டு, சிப்ஸ், பிட்ஸா, பர்கர்னு கண்டதையும் சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும். சாப்பாடுக்கு இடையில லேசா பசிச்சா, வெள்ளரிக் காய், மாதுளை பழம்.., இப்படி ஏதாவது பழங்களை சாப்பிடலாமே.
# தம்முக்கு குட்பை: ஐயோ..,ஐயோ.., இந்த சிகரெட்ல அப்படி என்னதான் இருக்கோ. ஆம்பளைக்கு அழகு சிகரெட் பிடிக்கறதுதான்ங்கற அச்சுபிச்சான கான்செப்டை எவன்தான் கண்டுபிடிச்சானோ!
காசு கொடுத்து தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்று நோய்னு வரவழைச்சுக்கணுமா என்ன? In case, உங்களுக்கு தம்- மை விட முடியாட்டி, தம் அடிக்கணும்னு தோண்ற நேரத்துல ஏதாவது munch பண்ணுங்க. கடலை மிட்டாய், வறுத்த கடலை.., இப்படி நிறைய இருக்கவே இருக்கே!
# டென்ஷன் வேண்டாமே: லட்சங்கள்ல சம்பாதிக்கணும்னு நாளுக்கு 20 மணி நேரம் உழைக்கறது இன்னிக்கு சகஜம் ஆயிடுச்சு. புருஷன்,பொண்டாட்டி பேசிக்க கூட இன்னிக்கு நிறைய பேருக்கு நேரம் கிடைக்கறதில்லை. ஒரு நாள்ல, ஒரு அரை மணி நேரம், உங்க ஹாபிக்காக செலவிடலாமே. உங்க ஹாபி எதுவா வேணா இருக்கலாம், இளையராஜா மியூசிக் கேட்கறதோ, வீடியோல காமெடி படம் பார்க்கறதோ.., இப்படி ஏதாவது, உங்களுக்கு பிடிச்ச விஷயத்துக்காக ஒரு அரை மணி நேரம் ஒதுக்க ட்ரை பண்ணுங்க.
# மாசு பட்ட காற்று ஆபத்து: சிகரெட் பிடிக்கறவனோட, தேமேனு அவன் பக்கத்துல இருக்கறவனுக்குதான் ஆபத்து அதிகமாங்க, சொல்றாங்க. முடிஞ்ச வரை, தம்மடிக்கற புகை வண்டிங்ககிட்ட போகாதீங்க. அது சரி, ரோடுல போற லாரி, பஸ்ஸ என்ன செய்ய முடியும். ஹும், அதுவும் கரெக்டான பாய்ண்டுதான். வீடு சுற்றி மரம், செடி,கொடி வளர்க்கலாம். மாசு பட்ட காற்றுல இருந்து தப்பிக்க நம்மால முடிஞ்சது இது மட்டும்தாங்க!
# சீட் பெல்டு அவசியம்: பேண்டுக்கு பெல்ட் போடறீங்களோ இல்லையோ, சீட் பெல்ட் கட்டாயம் போடணும். நிறைய பேருக்கு கார் விபத்துல மோசமான காயம் ஏற்படறதா புள்ளிவிவரம்லாம் தெளிவா சொல்லுது.
# பல்லு சுத்தம் முக்கியம்: தினமும் ரெண்டு தடவை பல் தேய்க்கணும். இதெல்லாம் ஒரு சமாசாரம்னு எழுதறீங்களேனு திட்டாதீங்க. இது சின்ன விஷயம் மாதிரி தெரிஞ்சாலும், முக்கியமான விஷயம். தூக்க கலக்கத்துல பலரும் சிரத்தையா பல் தேய்க்கறதில்லையாம். அதுவே, நம்ம ஆரோக்கியம் கெட்டு போறதுக்கு ஒரு முக்கியமான ரீசனாம்!
# தண்ணிக்கு தடா: என்னப்பா கவர்மெண்டே தடையில்லாம தண்ணி விற்குது. நீ இப்படி சொல்றியேனு கேட்கறது புரியுது. கவர்மெண்டுக்குதான் விவஸ்தை இல்லை. நம்ம ஆரோக்கியத்தை நாமலாவது ஒழுங்கா பார்த்துக்கலாமே. Social drinkerதாங்க நானு. எப்பவாது பார்ட்டி, கீர்ட்டினு வந்தா லேஸா.., ஹி..ஹி..னு அசடு வழியற கேஸா நீங்க. எப்படியோ ஸார்., பழக்கம் முத்திடாம பார்த்துக்கங்க.
# எல்லாத்துக்கும் சிரிங்க: ம்.., இப்ப என்னை லூசுனு முடிவே செஞ்சிருப்பீங்க. இருந்தாலும் அதுதாங்க உண்மை. வஞ்சனை இல்லாம சிரிச்சு சந்தோஷமா இருக்கறவங்க நீண்ட நாள் ஆரோக்கியமா வாழறாங்களாம். காசா பணமா சிரிச்சுதான் பார்ப்போமே!
Want to write for Maniyosai?
| < Prev |
|---|



