maniyosai.com

You are here: Home பொது ஹெல்த் ப்ளஸ் ஹெல்த் ப்ளஸ்-நல்லா தூங்க 7 டிப்ஸ்

ஹெல்த் ப்ளஸ்-நல்லா தூங்க 7 டிப்ஸ்

E-mail Print PDF
Share/Save/Bookmark

sleepதூக்கம் வராம இருக்கறதுதான் இன்னிக்கு பல பேரோட பிரச்சினையே. ரொம்ப ஓவரா தூங்கி வழியறது  தப்பு. அதுக்குனு, தூங்காம இருந்தா அதை விட தப்பு. தூக்கம் வரணும்னு நினைச்சு கண்ட கண்ட தூக்க  மாத்திரைகளை சிலர் உபயோகிக்கறாங்க. இது ஏடாகூடமான side effects செஞ்சு ஒரேயடியா தூங்க  வெச்சுடும்!


தூக்கம் வரதுக்கு சிம்பிளா 7 டிப்ஸ் தர்றோம்... இந்த டிப்ஸ்களை 7 நாள் ட்ரை பண்ணுங்க. அதுக்கு  அப்புறமும் சரி பட்டு வராட்டி, டாக்டரை Consult பண்ணுங்க. ஓகேவா?

# இதை நிறைய பேரு சொல்லி கேட்டிருப்பீங்க. இருந்தாலும், இது ரொம்ப முக்கியம். மத்தியானம் நேரம்  குட்டி தூக்கம் வேண்டாமே. அப்படி தூங்கணும்னா அதிகபட்சம் 30 நிமிடம் தூங்குங்க. அதுவும், மதியம் 3  மணிக்கு மேல தூங்க கூடாது.

# காலையிலேயோ, மதியமோ உடற்பயிற்சி செய்யுங்க. சில பேர் சாயங்காலம் பண்ணுவாங்க. தூங்க  போறதுக்கு முன்னாடி, உடம்பு வேர்க்க விறுவிறுக்க எக்சர்ஸைஸ் பண்ணா எப்படிங்க தூக்கம் வரும்.

# மதியம் 3 மணிக்கு மேல காபி, டீ, சோடா போன்ற ஐட்டங்களை தவிர்க்கறது நல்லது.

# தூங்கறதுக்கு ஒரு பக்காவான கால அட்டவணை போட்டுக்கோங்க. இன்னிக்கு 9 மணிக்கு படுக்கப்  போவன். நாளைக்கு 12 மணிக்கு படுக்கப் போவன்னு இஷ்டத்துக்கு செஞ்சா, தூக்கம் நோ சான்ஸ்!!

# தூங்கறதுக்கு முன்னாடி சிம்பிளான யோகாசனம் செய்யலாம். (சுளுக்கு கிளுக்கு பிடிச்சுக்காம  பார்த்துக்கோங்க!)

# தூங்க போகற முன்னாடி தண்ணி அடிக்கறதை நிறுத்துங்க. மது நாட்டுக்கும், வீட்டுக்கும் மட்டும் இல்ல.  தூக்கத்துக்கும் கேடு.

# படுக்க போகறதுக்கு முன்னாடி சூடான பால், சோயாபீன்ஸ், ஓட்ஸ் போன்ற சமாசாரங்களை சாப்பிட்டா  தூக்கம் நல்லா வருமாம்.

ட்ரை பண்ணி பார்த்துட்டு எங்களுக்கு மெயில் தட்டி விடுங்க. இதை படிச்சு நீங்க தூங்கினீங்களா  இல்லியா தெரிஞ்சிக்கற வரைக்கும் எங்களுக்கு தூக்கம் வராது!!

 




Want to write for Maniyosai?

Comments (5)
  • revathi  - health tips

    8) super

  • hasini

    You forgot to mention a tip... Read Maniyosai.com :grin

  • dhinakaran

    :grin fentastic

  • madhan  - good

    good

  • manikumar  - good

    sleeping is very important to life.it many tips is given to follow our life.i daily follow the tips. i feel to good sleeping. thk u.

Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Friday, 17 September 2010 15:53 )  


More and More


கிட்டதட்ட

உடல் எடை வழிகாட்டி

உயரம்

உடல் எடை



இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits