தேவையானப் பொருட்கள்:
சிரோட்டி ரவை - 1 கப்
சர்க்கரை - 2 கப்
பால் - 1 லிட்டர்
நெய் அல்லது டால்டா - பொரிக்க தேவையான அளவு
முந்திரி, கிஸ்மிஸ் - 1/4 கப்
ஏலக்காய் தூள் - சிறிது
செய்முறை:
1. ரவையை சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மிருதுவான சப்பாத்தி மாவுப் போல பிசையவும்.
2. பிசைந்த மாவை கோலியளவு சிறு உருண்டைகளாக்கி பானிபூரி போல சின்ன பூரிகளாய் இடவும்.
3. ஒரு வாணலியில் நெய் அல்லது டால்டா காய வைத்து சூடானதும் அதில் பூரிகளை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
4. ஸ்டவ்வில் இன்னொரு பக்கம் மற்றொரு வாணலியில் 1 ஸ்பூன் நெய்யில் முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை பொரித்து தனியே வைக்கவும்.
5. அதே வாணலியில் பாலை சுண்டக் காய்ச்சவும். (பால் பொங்கி வராமல் இருக்க வாணலியில் அடியில் ஒரு ஸ்பூன் போட்டு வைக்கலாம்.)
6. அத்துடன் ஏலக்காய் தூள் சர்க்கரை போட்டு மேலும் காய்ச்சவும்.
7.ரவை அப்பளங்களை பொரித்து உடனே காய்த்து கொண்டிருக்கும் பாலில் போடவும்.
8. இப்பொழுது அப்பளங்களுடன் சேர்ந்து பால் காய்வதால் அப்பளங்களும் மென்மையாகி நொறுங்கி ஏடுஏடாக பாசந்தி போல வரும்.
9. கடைசியில் அடுப்பை அணைத்து விட்டு வறுத்த முந்திரி திராட்சை கலக்கவும்.
Want to write for Maniyosai?
Download our android app
| Next > |
|---|


