maniyosai.com

You are here: Home பொது மணியோசை கிச்சன் பிசி பேளா பாத்

பிசி பேளா பாத்

E-mail Print PDF
Share/Save/Bookmark

bisi bela bath(2 - 4 பேருக்கு)

தேவையானப் பொருட்கள்:

அரிசி - 1 1/4 ஆழாக்கு
துவரம் பருப்பு - 1/2 ஆழாக்கு
புளி - பெரிய எலுமிச்சை அளவு

வெள்ளை எள்ளு - 1 மேஜைக் கரண்டி (டேபிள் ஸ்பூன்)
கொப்பரைத் துருவல் - 2 மேஜைக் கரண்டி (டேபிள் ஸ்பூன்)
உப்பு - தேவையான அளவு
முந்திரி - விருப்பப்பட்டால்
நெய் - 2 மேஜைக் கரண்டி (டேபிள் ஸ்பூன்)
நல்லெண்ணெய் - 1 மேஜைக் கரண்டி (டேபிள் ஸ்பூன்)

மசாலாப் பொருட்கள்:
தனியா - 2 மேஜைக் கரண்டி (டேபிள் ஸ்பூன்)
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி (டீஸ்பூன்)
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி (டீஸ்பூன்)
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய் வற்றல் - 8
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி (டீஸ்பூன்)

செய்முறை:

அரிசியையும் துவரம் பருப்பையும் கலந்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 6 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். 5 விசில் சத்தம் வரும் வரை வேக வைத்தால் நன்கு குழைந்து பொங்கல் பதத்திற்கு இருக்கும். புளியை 1 கப் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். வெறும் வாணலியில் வெள்ளை எள்ளை வறுத்துத் தனியே வைக்கவும். பிறகு சிறிது எண்ணெய் விட்டு மசாலாப் பொருட்களை சிவக்க வறுக்கவும். பின்னர் அதை எடுத்து வைத்துவிட்டு அதே வாணலியில் கொப்பரையை வாசனை வரும்வரை வறுக்கவும். மிக்ஸியில் முதலில் மசாலாவைத் தண்ணீர் விடாமல் அரைத்துவிட்டு பின் எள்ளு, கொப்பரை சேர்த்து ஒரு சுற்று அரைத்து எடுக்கவும்.

புளியைப் பிழிந்து சாறு எடுத்து அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாக் கலவை, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கும் போது வேகவைத்த பருப்பு சாதத்தை அத்துடன் கலக்கவும். தேவையானால் சிறிது தண்ணீர் கலந்துக் கொள்ளவும். ஸ்டவ்வை சிம்மிலேயே வைத்து கட்டித் தட்டாமலும், அடிப்பிடிக்காமலும் கலக்கவும். பின்னர் வாணலியில் நல்லெண்ணெயில் கடுகு, கறிவேப்பிலைத் தாளித்து சாதத்துடன் கலக்கவும். பின் கடைசியில் நெய்யில் முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுத்து மேலேத் தூவி அலங்கரிக்கவும். சூடான சுவையான பிசிபேளாபாத் ரெடி!




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 06 January 2010 16:16 )  


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits