தேவையானப் பொருட்கள்:
வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்
மிளகாய் - 8-10
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப
வெங்காயம்- 1 (விருப்பப்பட்டால்)
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
செய்முறை:
1. கொண்டைக்கடலையை 10 மணி நேரத்திற்கு முன்னதாக ஊற வைக்கவும்.
2. ஊறிய கொண்டைக்கடலையை நன்கு கழுவி தண்ணீர் வடித்து, அத்துடன் கறிவேப்பிலை, வெங்காயம் தவிர மற்ற பொருட்களையும் கலந்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
3. அதில் பொடியாக அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை கலந்து ஒருமுறை கையால் கலந்துவிடவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் காய வைத்து எண்ணெய் காய்ந்ததும் வடைப் பொரித்தெடுக்கவும்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


