
தேவையானப் பொருட்கள்:
வெள்ளரிக்காய்- 1
கடைந்த கெட்டித் தயிர் - 1 கப்
சீரகத் தூள்- 1/2 டீஸ்பூன்
உப்பு- ருசிக்கேற்ப
பச்சை மிளகாய் - 1
எண்ணெய்- தாளிக்க
கொத்துமல்லி தழை- அலங்கரிக்க
செய்முறை:
1. கடைந்த கெட்டித் தயிரில் உப்பு சீரகத்தூள் கலக்கவும்.
2. வெள்ளரிக்காய் கசப்பு இல்லாமல் இருக்கிறதா என ருசிப் பார்த்து தோல் சீவி துறுவிக் கொள்ளவும்.
3. துறுவிய வெள்ளரியை நன்குப் பிழிந்து கடைந்த தயிருடன் கலக்கவும்.
4. எண்ணெய் காய வைத்து அதில் பச்சை மிளகாய், சிறிது சீரகம் போட்டு தாளித்து தயிர் பச்சடியுடன் கலக்கவும்.
5. கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
(குறிப்பு- வெள்ளரிக்காயை துறுவி நீண்ட நேரம் வைக்க வேண்டாம். பரிமாறுவதற்கு சற்று முன் துறுவி உடனே தயிரில் கலந்து விடவும்.)
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


