
தேவையானப் பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பொடியாக வெட்டிய கலவைக் காய்கறிகள்
(உருளைக் கிழங்கு, கேரட்,முட்டைகோஸ்,
பீன்ஸ், காலிபிளவர்,பட்டாணி) - 2 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
மிளகுத் தூள்- 1 தேக்கரண்டி
தனியாத் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகத் தூள் - 2 சிட்டிகை
கரம் மசாலா தூள்- 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டுவிழுது - 1/2 தேக்கரண்டி
நெய்- சமைக்க தேவையான அளவு
உப்பு- ருசிக்கேற்ப
மேலே அலங்கரிக்க:
நறுக்கிய கொத்துமல்லி தழை- சிறிது
முந்திரி பருப்பு- 1 மேசைக் கரண்டி
செய்முறை:
1. அரிசியை வேக வைத்து உதிர்த்து ஒரு தட்டில் பரப்பி நன்கு ஆற வைக்கவும்.
2. வெங்காயத்தை பொடியாகவும், தக்காளியை சதுரத்துண்டுகளாகவும் வெட்டிக் கொள்ளவும்.
3. புளிக்காத கெட்டித் தயிரைக் கடைந்து அதில் மசாலாப் பொருட்கள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுதை அரை மணி நேரம் முன்னதாகவே சேர்த்து கலக்கி வைக்கவும்.
4. ஒரு கடாயில் நெய்யை காய வைத்து அதில் அரிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
5. தக்காளி நன்கு வதங்கியதும் அரிந்த காய்கறிகளை போட்டு சிறிதுசிறிதாக தண்ணீர் தெளித்து வதக்கவும்.
6. காய்கறிகள் வெந்ததும் அதில் மசாலா கலந்த தயிர், ஆற வைத்த சாதம் அனைத்தும் கலந்து அதிகப்படியான தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறவும்.
7. நறுக்கிய கொத்துமல்லித் தழை, வறுத்த முந்திரி பருப்பை மேலே வைத்து அலங்கரிக்கவும்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


