
தேவையானப் பொருட்கள்:
அரிசி - 1 கப்
தேங்காய் துறுவல்- 4 கப்
வெல்லம் - 3 கப்
நெய்- 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
மேலே அலங்கரிக்க:
பாதாம், பிஸ்தா பருப்பு வகைகள் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. அரிசியை நன்கு கழுவி இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
2. ஊறிய அரிசியை தண்ணீர் வடித்து நைசாக அரைக்கவும்.
3. அதில் துறுவிய வெல்லத்தை கட்டித் தட்டாமல் கலந்து தனியே வைக்கவும்.
4. தேங்காய் துறுவலில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து நன்கு பிழிந்து பால் எடுக்கவும். பிழிந்த தேங்காய் துறுவலை மீண்டும் மீண்டும் நன்கு சக்கையாக ஆகும் வரை அரைத்து பால் எடுக்கவும்.
5. மிதமான அனலில் ஒரு வாணலியில் தேங்காய் பாலை ஊற்றி கலக்கவும். 10 - 15 நிமிடங்களுக்கு கைவிடாமல் நன்கு கிளறவும். இல்லாவிட்டால் அடிப்பிடித்து விடும்.
6. கலந்து வைத்த அரிசி வெல்ல கலவையை அத்துடன் கலக்கவும்.
7. அத்துடன் ஏலக்காய் தூள் நெய் கலந்து மிதமான அனலில் கிளறவும்.
8. அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.
9. அல்வாவை நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது சூடு ஆறியதும் சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
10. பாதாம் பிஸ்தா பருப்புகளை பொடியாக நறுக்கி மேலேத் தூவி அலங்கரிக்கவும்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


