maniyosai.com

You are here: Home பொது மணியோசை கிச்சன் புழுங்கலரிசி முறுக்கு

புழுங்கலரிசி முறுக்கு

E-mail Print PDF
Share/Save/Bookmark

arisi murukkuதேவையானப் பொருட்கள்:

புழுங்கல் அரிசி (இட்லி அரிசி) - 4 ஆழாக்கு
பொட்டுக்கடலை - 1 கப்
நெய் அல்லது வனஸ்பதி
அல்லது வெண்ணெய் - 2 மேஜைக் கரண்டி (டேபிள் ஸ்பூன்)
மிளகாய் வற்றல் - 15
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி (டீஸ்பூன்)
உப்பு - தேவையான அளவு
வெள்ளை எள்ளு - 2 தேக்கரண்டி (டீஸ்பூன்)

செய்முறை:

அரிசியை 2 அல்லது 3 மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் அரிசி, மிளகாய் வற்றல், பெருங்காயம் கலந்து நைசாக தோசை மாவுப் பதத்தில் அரைத்துக் கொள்ளவும். கடைசியாக உப்பு சேர்த்து எடுக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைசாக பொடி செய்து, சலித்து அரைத்து வைத்த மாவுடன் கட்டித் தட்டாமல் கலக்கவும். பின்னர் நெய், வெள்ளை எள்ளு கலக்கவும்.

ஈர டவலைத் தரையில் பரப்பி அதில் மொத்த மாவையும் கொட்டி மூட்டைப் போலக் கட்டி நன்கு உருட்டவும். இப்படி செய்யும்போது அதிகப் படியான ஈரப்பதத்தை டவல் உறிந்துக் கொண்டு மாவு சப்பாத்தி மாவுப் பதத்திற்கு வந்து விடும். அதை முறுக்கு அச்சில் போட்டு காய வைத்த எண்ணெயில் பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits