maniyosai.com

You are here: Home பொது சத்தியசோதனை சத்தியசோதனை - பகுதி 12

சத்தியசோதனை - பகுதி 12

E-mail Print
Share/Save/Bookmark

Young Gandhiஎனக்கு 16 வயது ஆகும் வரை மதத்தைப் பற்றி பள்ளியில் எதையும் கற்றுக் கொள்ளவில்லை, மதம் என்றால் சுய அறிவு நாம் யார் என்று ஆராய்ந்து தெளிவதே மதம். வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்தால் அடிக்கடி ஹவேலிக்கு செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன், ஆனால், ஹவேலியின் ஆடம்பரம் என்னைக் கவரவில்லை.

ஹவேலி எனக்கு கற்றுத்தராத ஒன்றை, எனக்கு தெரிந்த ஒரு  நர்ஸ் பெண்மணியிடம் கற்றுக் கொண்டேன். நான் சிறுவனாக இருந்ததில் இருந்து, என்னை அவருக்கு தெரியும். எனக்கு சிறு வயதில்,பேய்கள் மீது பயம் இருந்ததாக ஏற்கனவே எழுதியிருந்தேன் அல்லவா, பேய் பயம் வரும் போதெல்லாம், ராமபிரானை பிராத்திக்கும் படி, அவர்த்தான் எனக்கு அறிவுறுத்தினார். அவர், அன்று விதைத்த விதைதான், இன்றும் எனக்கு ராமபிரான் மீது இருக்கும் பிடிப்புக்கு காரணம்.

என் தந்தைக்கு உடல் நலம் குன்றியிருந்த போது, லதா மகராஜ் என்பவர், என் தந்தைக்கு எதிரில் அமர்ந்து,தினமும் மாலை வேளைகளில் ராமாயண உபந்யாசம் செய்து வந்தார். லதா மகாராஜ்ஜுக்கே, முன்பு, தொழு நோய் இருந்தாகவும், ராமரை பிரார்த்தனை செய்து குணமடைந்தாகவும் கேள்விப் பட்டுள்ளேன்.

லதா மகாராஜ்ஜுக்கு இனிமையான குரல் வளம் இருந்தது. ராமாயணத்தை அவர் மெட்டமைத்து பாடல் போல் பாடும் போது, கேட்பவர்களுக்கு மெய்சிலிர்க்கும். ராமாயணம் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட அவரும் ஒர் காரணம். ராமாயணம் தான், நான் படித்ததிலேயே தலை சிறந்த காப்பியம் என்பது, இன்று வரை என் அசைக்க முடியாத கருத்து.

போர்பந்தரில் இருந்து, நாங்கள் ராஜ்காட் வந்தவுடன், ராமாயண உபந்யாசம் நின்று போனது. ஏகாதசி நாட்களில் மட்டும் பகவத்கீதை சொற்பொழிவு நடக்கும். ஆனால், அந்த சொற்பொழிவாளர் என்னைக் கவரவில்லை. அண்மையில், பண்டித் மதன் மோகன் மலாவியாவின் பகவத்கீதை சொற்பொழிவைக் கேட்டேன். சிறு வயதிலேயே, பகவத்கீதை மீது ஆர்வம் வளர்த்துக் கொள்ளாமல் இருந்து விட்டோமே என அப்போது தோன்றியது.

ராஜ்கோட்டில், நாங்கள் இருந்த போது, சில ஜெயின் துறவிகள், என் அப்பாவை சந்திக்க வருவர் என் தந்தை மீது இருந்த மரியாதை காரணமாக, ஜெயினர்கள் அல்லாத நாங்கள் கொடுக்கும் உணவைக் கூட அவர்கள் சாப்பிட்டுள்ளனர். அதே போல, என் தந்தைக்கு முஸ்லிம் மற்றும் பாரசீக நண்பர்களும் இருந்தனர். என் தந்தையை சந்திக்க அவர்கள் வரும் போதெல்லாம், தங்கள் மதங்களைப் பற்றி பேசுவர். அப்பாவும், பொறுமையாக கேட்டுக் கொள்வார்.

அப்பா, படுத்த  படுக்கையாக இருந்த போது, அவர் அருகிலேயே இருந்தால், நானும், இந்த உரையாடல்களை கவனித்து வந்தேன். மற்ற மதங்கள் மீது இன்று எனக்கு இருக்கும் சகிப்புத் தன்மைக்கு அதுவே காரணம்.

(தொடரும்)




Want to write for Maniyosai?

 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits