maniyosai.com

You are here: Home பொது சத்தியசோதனை சத்தியசோதனை-பகுதி 2

சத்தியசோதனை-பகுதி 2

E-mail Print PDF
User Rating: / 1
PoorBest 

இளம் வயது நினைவுகள்::

போர்பந்தரிலிருந்து ராஜ்காட்டிற்கு அப்பா மாற்றல் ஆகும் போது எனக்கு ஏழு வயது இருக்கும். அங்கு என்னை ஆரம்ப பள்ளியில் சேர்த்தார்கள். என் ஆசிரியைகள் பெயர்கள் உட்பட அனைத்தும் என் நினைவில் பசுமையாக உள்ளன. படிப்பில் நான் சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை. சுமார்தான். பள்ளி பருவத்தில் ஒரு சிறிய பொய் சொன்னதாக கூட எனக்கு நினைவில்லை. எனக்கு கூச்ச சுபாவமும் அதிகம். புத்தகங்கள் மட்டுமே என் நண்பர்கள். பள்ளி விட்டவுடன் வீட்டுக்கு ஓடி விடுவேன். 'ஓடி விடுவேன்' என்பது மிகையில்லை. என்னை யாராவது கேலி செய்து விடுவார்களோ என்ற பயம்.

என் பள்ளிக்கூட நாட்களில் நடந்த ஒரு தேர்வை இங்கு அவசியம் குறிப்பிட வேண்டும். திரு. கைல்ஸ் (Giles) பள்ளிக்கூட இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்திருந்தார். ஐந்து வார்த்தைகளை சொல்லி எழுத சொன்னார். அதில், kettle என்பது ஒரு சொல். நான் அந்த சொல்லை எழுதும் போது எழுத்துப் பிழை செய்து விட்டேன். ஆசிரியர், தன் காலால் என் காலை மிதித்து, பக்கத்து மாணவனிடமிருந்து காபி அடிக்கும் படி சமிக்ஞை செய்தார். நான் அதை கண்டுக் கொள்ளவில்லை. என்னை தவிர அனைத்து மாணவர்களும் அந்த சொல்லை சரியாக எழுதியிருந்தனர். எனக்கு மட்டும் அவ்வளவு சாமர்த்தியம் போதவில்லை. அவர் பல முறை சொல்லியும் ‘காப்பி' அடிக்கும் கலை எனக்கு கை கூடவில்லை.

இதே காலக்கட்டத்தில் நடந்த இன்னும் இரண்டு நிகழ்ச்சிகள் என் நினைவில் உள்ளன. என் பள்ளி பாடநூல்களை தவிர பிற புத்தகங்களை படிக்கும் பழக்கம் எனக்கு இருந்ததில்லை.

மற்றொரு நாடகம். ஒரு நாடக குழு நடத்திய நாடகத்தை பார்க்க என் அப்பாவிடமிருந்து அனுமதி பெற்றேன். அந்த நாடகம்தான் ஹரிச்சந்திரா. ‘ஏன் அனைவரும் ஹரிச்சந்திரனாக இருக்க கூடாது?' என்று நாடகம் பார்த்தது விட்டு என்னை நானே கேட்டுக் கொண்டேன். இடர்கள் வந்தாலும் வாய்மையை கை விடாத ஹரிச்சந்திரனின் கதை என்னை மிகவும் கவர்ந்தது. ஹரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து நான் தேம்பி அழுதேன். என் வாழ்க்கையின் பாதையை மாற்றியவர்கள் ஹரிச்சந்திரனும், ஷ்ராவணனும்.


 


More and More


Banner

கிட்டதட்ட

04 September 2010, 19.07 செய்திகள்
75ம் ஆண்டு விழாவை கொண்டாடும் சிங்கப்பூர் தமிழ் நாளிதழ்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழான தமிழ்...மேலும்...
0 Comments , 27 Hits
02 September 2010, 20.06 தலைப்புச் செய்திகள்
காங்கிரஸ் தலைவராக சோனியா போட்டியின்றி தேர்வு
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து...மேலும்...
0 Comments , 35 Hits
02 September 2010, 18.49 தலைப்புச் செய்திகள்
மாவோயிஸ்ட்கள் வெறியாட்டம். 4 போலீசாரில் ஒருவர் கொலை
பாட்னா: பீகாரில் மாவோயிஸ்ட்கள் கடத்தி சென்ற 4 போலிசாரில் ஒருவர்...மேலும்...
0 Comments , 33 Hits

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என விஜயகாந்த் சொல்வது...

மருத்துவம்

ஹெல்த் ப்ளஸ் - மெட்ராஸ் ஐ வராமல் தடுப்பது எப்படி?
’மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் அழையா விருந்தாளி....மேலும்
0 Comments , 53 Hits
ஹெல்த் ப்ளஸ் - நமீதா டூ திரிஷா
நாம் தீவிரமாக செய்கிறோமோ இல்லையோ, எடைக் குறைத்தல் பற்றி...மேலும்
1 Comment , 321 Hits
ஹெல்த் ப்ளஸ் - கோடையை சமாளிக்க சில வழிகள்
கோடை காலம் வந்தாலே குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். 2...மேலும்
4 Comments , 251 Hits

Feedback Form
Feedback Analytics