maniyosai.com

You are here: Home பொது சத்தியசோதனை சத்தியசோதனை-பகுதி 3

சத்தியசோதனை-பகுதி 3

E-mail Print PDF
Share/Save/Bookmark

Gandhijiஇந்த பகுதியை நான் எழுத வேண்டாம் என நினைத்தாலும், காலத்தால் மறக்க முடியாத கசப்பான நினைவுகளை என்னுள் போட்டு புதைக்க முடியாது என்பதால், வேறு வழியின்றி இந்த பகுதியை எழுதிகிறேன். வாய்மையில் நம்பிக்கை இருப்பதால் நான் உண்மைகளை மறைக்கவும் முடியாது. பதின்மூன்று வயதில் எனக்கு நடந்த திருமணத்தை இங்கு பதிவு செய்வது என் வேதனை தரும் கடமை.

எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. நேரடியாக திருமணம் நடந்து விட்டது. எனக்கு ஏற்கனவே இரண்டு தடவை, எனக்கு தெரியாமலேயே வெவ்வேறு பெண்களுடன் நிச்சயதார்த்தம் ஆனதாம். ஆனால், இரண்டு பெண்களும் அகால மரணம் அடைந்து விட்டதாக சொன்னார்கள். நிச்சயதார்த்த படலங்கள் என் ஏழாவது வயதில் நிகழ்ந்தன. அது பற்றி தெளிவாக நினைவில்லை என்பதால் திருமணம் பற்றி எழுதுகிறேன்.

இந்து திருமண சடங்குகள் அவ்வளவு எளிதானவை அல்ல. ஆடை, ஆபரணங்கள் வாங்க, பலகாரங்கள் செய்ய மாதக் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். பெண்களாக இருந்தால் கட்டாயம் பாடி, அக்கம்பக்கத்தினரை இம்சை செய்ய வேண்டும்! தங்கள் வாரிசுகளின் திருமணம் குறித்து பெற்றோர்களுக்கு நிறைய கனவுகள் இருக்கும். எனக்கும் என் சகோதரனுக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

இந்த தடபுடல்களை வைத்தே என்ன செய்ய காத்துள்ளனர் என்பது எங்களுக்கு இலேசாக புரியும். என்னை பொருத்த வரை, திருமணம் என்றால் புது துணி அணிவது, மேள தாளங்கள் முழங்குவது, ஆடம்பரமான உணவு, விளையாட புது சிநேகிதி!

என்னையும் என் அண்ணனையும் திருமணத்திற்கு ராஜ்காட்டிலிருந்து (Rajkot) போர்பந்தர் அழைத்து சென்றனர்.

தாக்கூர் அரசரின் இடது கை என் அப்பா. அப்பா இல்லாமல் தாக்கூருக்கு ஓர் அணுவும் அசையாது. அதனால் கடைசி நிமிடம் வரை என் அப்பாவால் திருமணத்துக்கு கிளம்ப முடியவில்லை. கிளம்பும் போது என் அப்பாவின் பயணத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்தார். ராஜ்காட்டுக்கும் போர்பந்தருக்கும் இடையே 120 மைல் தூரம். பயணத்திம் போது அப்பா பயணம் செய்த வண்டி கவிழ்ந்து விட்டது. பயங்கர அடி. இதனால் திருமண நிகழ்ச்சி மீது இருக்கும் உற்சாகம் குறைந்து விட்டது. இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளும் குழந்தை தனமான குஷியால் தந்தையின் விபத்து என்னை பாதிக்கவில்லை.

பெற்றோர்கள் மீது எனக்கு அளவு கடந்த பக்தி. ஆயினும், இது போல அற்ப சுகங்களுக்கு அவ்வப்போது அடிமை ஆகி விடுவது எனக்கு வழக்கமாக இருந்தது. இந்த அற்ப சந்தோஷத்தில் எனக்கு இருக்கும் மோகத்தை விளக்க ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது பற்றி பின்னர் கூறுகிறேன்.

வலிகளை மறந்து என் தந்தை திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். திருமண நாளில் அவர் எங்கு உட்கார்ந்தார், என்ன செய்தார் போன்ற சின்னஞ்சிறு நிகழ்வுகளும் இன்றும் என் மனக்கண்ணில் நீங்காமல் உள்ளன. பால்ய விவாகமாக இருந்தாலும் அன்று  அது எனக்கு இனிக்கவே செய்தது.
திருமண நிகழ்ச்சி முடிந்து நானும், என் மனைவியும் சம்சார சாகரத்தில் குதித்தோம்! என் புது மனைவியிடம் எப்படி பேசுவது, பழகுவது என்று எனக்கு குழப்பமாக இருந்தது. எங்களுக்கு சம வயதாக இருந்தாலும், கணவன் என்றால் எப்படி அதிகாரம் செய்ய வேண்டும் என்று அப்போதே நான் தெரிந்து கொண்டேன்.




Want to write for Maniyosai?

 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits