maniyosai.com

You are here: Home பொது சத்தியசோதனை சத்தியசோதனை - பகுதி 13

சத்தியசோதனை - பகுதி 13

E-mail Print
Share/Save/Bookmark

Mahathma Gandhi

ந்தக் காலத்தில் எனக்கு பிடிக்காத மதம் என்றால் அது கிறிஸ்தவ மதம் மட்டுமே. ஏனெனில், அப்போது, தெருமுனை கூட்டங்கள் நடத்தி இந்து கடவுள்களை வசை பாடுவதை அவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். அவற்றை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

எங்கள் ஊரில் இருந்த ஒரு இந்து, கிறிஸ்தவனாக மதம் மாறினான். அவனை மாமிசம் உண்ணவும், மது அருந்தவும் கிறிஸ்தவர்கள் வற்புறுத்துவதாக ஊர் முழுக்க பேசிக் கொண்டனர். ஒருவனை மாமிசம் உண்ணவும் , மது அருந்தவும் ஒரு மதம் வலியுறுத்துமென்றால், அது மதமாகவே இருக்க முடியாது என்று எனக்கு தோன்றியது. கிறிஸ்தவனாக மதம் மாறிய அவன், இந்துக்களை கேவலமாக திட்ட ஆரம்பித்திருந்தான். இவையெல்லாம் எனக்கு கிறிஸ்தவ மதம் மீது வெறுப்பை ஏற்படுத்தியது.

அப்பொழுது மனு தர்மம் பற்றிய நூல்களை படிக்க நேர்ந்தது. உலகம் படைக்கப் பட்டதை விளக்கும் மனு தர்மம், எனக்கு பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவில்லை. அதை படித்து விட்டு நான் கிட்டதட்ட நாத்திகவாதி ஆகி விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மனு தர்மம் பற்றிய என் சந்தேகங்களை என் ஒன்று விட்ட அண்ணனிடம் கேட்டேன். அவனாலும் எனக்கு தகுந்த விளக்கம் அளிக்க முடியவில்லை. 'வளர வளர நீயே மனு தர்மம் பற்றி புரிந்துக் கொள்வாய். இந்த வயதில் இத்தகைய சந்தேகங்கள் உனக்கு வரக் கூடாது.' என அவன் அளித்த பதில் எனக்கு திருப்தியாக இல்லை.

அப்போது, மனு தர்மம் அகிம்சை பற்றி எதையுமே எனக்கு விளக்கவில்லை என நினைத்தேன். மாமிசம் உண்பதை மனு தர்மம் ஆதரிப்பதாக எனக்கு தோன்றியது. பாம்புகளையும், பூச்சிகளையும் கொல்வதில் தவறில்லை; அது நம் கடமை எனக் கருதி வந்தேன்.

ஒரு விஷயம் மட்டும் என மனதில் ஆழமாக வேரூன்றியது. நன்னடத்தை மட்டுமே வாழ்க்கையின் அடிப்படை; நன்னடத்தையின் சாராம்சமே வாய்மை. என்னுடைய ஒரே நோக்கமே வாய்மையை கடைப் பிடிப்பது என்று ஆகி விட்டது. வாய்மையை பின்பற்றுவதில் எனக்கு இருந்த உறுதி நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே இருந்தது.

தற்கிடையே, 1887ம் ஆண்டு மெட்ரிக்குலேஷன் தேர்வுகளை நான் எழுதி தேர்ச்சி பெற்றேன். அப்பொழுதெல்லாம் பம்பாய், அகமதாபாத் ஆகிய இரண்டு நகரங்களில் மட்டுமே தேர்வுகள் நடக்கும். நாட்டில் நிலவிய வறுமை காரணமாக கத்தியவார் மாணவர்கள், அருகாமையில் இருக்கும் அகமதாபாத்துக்கே தேர்வு எழுத செல்வர். என் குடும்ப வறுமை காரணமாக நானும் அவ்வாறே செய்தேன். ராஜ்காட்டில் இருந்து நான் அகமதாபாத் செல்வது அதுவே முதல் முறை. அதுவும் தனியாக.

பள்ளிக் கல்வி முடித்தவுடன் நான் கல்லூரியில் படிக்க வேண்டும் என குடும்பத்தில் பெரியவர்கள் என்னை வலியுறுத்தினர். கல்லூரிக்கு போக வேண்டுமென்றால், பாவ்நகருக்கோ பம்பாய்க்கோதான் செல்ல வேண்டும். பாவ்நகரில் கொஞ்சம் குறைந்த செலவில் படிக்கலாம். அதனால்,பாவ்நகர் சாமல்தாஸ் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு சேர்ந்தவுடன், எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது.

பாடங்கள் கடினமாக இருந்தன. அது தரமான கல்லூரியாக இருந்ததால், பேராசிரியர்கள் நடத்தும் பாடங்கள் எனக்கு புரியவே இல்லை. முதல் வருடம் முடிந்து விடுமுறையில், நான் வீட்டுக்கு வந்திருந்தேன்.

மாவ்ஜி தேவ் என்று என் தந்தைக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் படிப்பில் மிகவும் கெட்டி. தந்தை மறைந்த பின்பும் அடிக்கடி வீட்டுக்கு வந்து எங்கள் நல்லது கெட்டது பற்றியெல்லாம் ஆலோசனை வழங்கி வந்தார்.

என் விடுமுறை நாட்களில், ஒரு தடவை வீட்டுக்கு வந்தார். என் தாயுடனும், அண்ணனுடனும் உரையாடிக் கொண்டிருந்தவர், என் படிப்பை பற்றியும் விசாரித்தார். நான் சாமல்தாஸ் கல்லூரியில் படிப்பதை அவர்களிடமிருந்து அறிந்துக் கொண்ட தேவ் அவர்கள், "காலம் ரொம்ப மாறி விட்டது. கல்வி இல்லாத நீங்கள், உங்கள் தந்தை அளவு முன்னேற முடியாது. இந்த சிறுவன் தற்போதைக்கு படித்துக் கொண்டிருப்பதால், உங்கள் தந்தை அளவு முன்னேற இவனால் மட்டுமே முடியும். இவன் பி.ஏ. படித்து முடிக்க நான்கைந்து ஆண்டுகள் ஆகும். அதை படித்து 60 ரூபாய் சம்பளத்துக்கு எங்கேயாவது வேலைக்கு சேர முடியுமே தவிர, திவான் ஆக முடியாது.

பேசாமல் இவனை இங்கிலாந்துக்கு அனுப்பி விடுங்கள்.அங்கு சட்டம் படிப்பது மிகவும் சுலபம். மூன்றே ஆண்டுகளில் படிப்பை முடித்து இவன் திரும்பி விடலாம். செலவும் பெரிதாக ஆகாது. 4 ஆயிரம் அல்லது 5 ஆயிரத்திற்கு மேல் ஆகாது. இங்கிலாந்தில் படித்து விட்டு திரும்பியவுடன் இவன் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள்.' என கூறினார்.

சாமல்தாஸ் கல்லூரியில் படிக்க தடுமாறிக் கொண்டிருந்த எனக்கு, மாவ்ஜியின் அந்த டீல் ரொம்ப பிடித்திருந்தது.


- தொடரும்

 




Want to write for Maniyosai?

Download our android app


Last Updated ( Friday, 15 October 2010 13:36 )  


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits