maniyosai.com

You are here: Home பொது சத்தியசோதனை சத்தியசோதனை - பகுதி 14

சத்தியசோதனை - பகுதி 14

E-mail Print
Share/Save/Bookmark

Gandhiஇங்கிலாந்தில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், சட்டம் பயில்வதில் எனக்கு பெரிய ஆர்வம் இல்லை. 'என்னை மருத்துவம் படிக்க வைக்கலாமே?' என்றேன்.

'வைணவர்கள், பிணங்களை கூரு போடும் செயலை செய்யக் கூடாது என தந்தை அடிக்கடி சொல்வார். நீ வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதே தந்தையின் விருப்பமாக இருந்தது.' என்று என் அண்ணன் பதிலளித்தார். 'மருத்துவம் நம் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு எதிரானது அல்ல. இருந்தாலும், நீ திவான் ஆக மருத்துவ படிப்பு உதவாது. நீ ஒரு திவான் ஆக வேண்டும் என்பதே என் விருப்பம். நீ திவான் அந்தஸ்துக்கு உயர்ந்தால்தான் உன் பெரிய குடும்பத்தை உன்னால் காப்பாற்ற முடியும்.'என என்னிடம் கூறிய மாவ்ஜி தேவ், என் அன்னையிடம், 'நான் சொன்னதை நன்றாக சிந்தித்து பாருங்கள். நான் இப்பொழுது கிளம்பும் நேரம் வந்து விட்டது. அடுத்த தடவை நான் இங்கு வரும் போது மோகன் தாஸை இங்கிலாந்துக்கு அனுப்ப நீங்கள் ஆயத்தம் ஆகியிருக்க வேண்டும். ஏதாவது உதவி தேவை பட்டால் என்னிடம் கேளுங்கள்.' என்றார்.

மாவ்ஜி தேவ் புறப்பட்டதும் ஆகாய கோட்டை கட்ட ஆரம்பித்தேன். என்னை தனியாக வெளிநாட்டுக்கு அனுப்புவது உத்தமமா என என் அண்ணன் சிந்திக்க ஆரம்பித்தார்.

என்னை விட்டு பிரிவதில் என் தாயாருக்கு விருப்பம் இல்லை. போர்பந்தரில் இருக்கும் சித்தப்பாவிடம் அனுமதி வாங்கி வரும் படி சொன்னாள்.

'போர்பந்தர் மாகாணத்தில் நமக்கு சொந்தமான சொத்துக்கள் கொஞ்சம் உள்ளன, திரு. லெல்லியே அவற்றை நிர்வாகம் செய்து வருகிறார். நம் குடும்பத்தின் மீது அவருக்கு அதிக மதிப்பு உண்டு. நீ இங்கிலாந்துக்கு செல்ல அரசு உதவி பெற அவர் உனக்கு உதவ வாய்ப்புண்டு.' என என் அண்ணன் ஒரு யோசனை சொன்னார்.

அண்ணன் யோசனையைக் கேட்டு போர்பந்தர் செல்ல தயார் ஆனேன். அந்தக் காலத்தில் ரயில் வண்டியெல்லாம் கிடையாது. போர்பந்தருக்கு செல்ல 5 நாட்கள் மாட்டு வண்டி பயணம் மேற்கொள்ள வேண்டும். நான் மிகப் பெரிய பயந்தாங்கொள்ளி என ஏற்கனவே கூறியிருக்கிறேன் அல்லவா? ஆனால், இங்கிலாந்து போகும் ஆர்வத்தில் என் கோழைத் தனம் மாயமாய் மறைந்து விட்டது. தொராஜி வரை மாட்டு வண்டியில் பயணம் ஆனேன். போர்பந்தருக்கு ஒரு நாள் முன்னதாகவே செல்ல, தொராஜி முதல் போர்பந்தருக்கு செல்ல ஒரு ஒட்டகத்தை வாடகைக்கு எடுத்தேன். நான் ஒட்டக சவாரி செய்வது அதுவே முதல் முறை.

போர்பந்தருக்கு ஒரு வழியாக அடைந்தேன். அங்கு என் சித்தப்பாவிடம், நான் இங்கிலாந்து செல்வது பற்றி கூறினேன். நான் சொன்னதை யோசித்தவர், 'நம் மத அடையாளங்களை இழக்காமல் இங்கிலாந்தில் ஒருவரால் வாழ முடியாது. இங்கிலாந்து சென்று திரும்பிய வழக்கறிஞர்களை பார்க்கும் போது, அவர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் என்ன வித்தியாசம் என நினைக்க தோன்றும்.

அவர்களுடைய உணவு பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறியிருக்கும். அவர்கள் வாய்களில் எந்நேரமும் சிகரெட் புகைந்து கொண்டிருக்கும். அவர்கள் அணியும் உடைகள், ஆங்கிலேயன் அணிவதை விட மோசமானதாக இருக்கும். நம் ஆசாரமான குடும்ப பின்னணிக்கு இதெல்லாம் சரி பட்டு வருமா? என் அந்திமக் காலத்தில், கடல் கடந்து இங்கிலாந்து செல்வதை எப்படி என்னால் அனுமதிக்க முடியும்? ஆனால், உன் வாழ்க்கையில் நான் குறுக்கே நிற்க மாட்டேன். உன் தாயார் அனுமதித்தால், எனக்கு ஆட்சேபணை இல்லை. என் ஆசிர்வாதம் உனக்கு எப்பொழுதும் இருக்கும்.' என்றார்.

'இதுவே போதும். அம்மாவை சுலபமாக சமாளித்து விடுவேன். ஆனால், திரு.லெல்லியை பார்க்க நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டும்.' என்றேன்.

'எப்படி செய்ய முடியும். நீ அவரை சந்திக்க நேரம் கேட்டு வாங்கிக் கொள். அவர் மிகவும் நல்லவர்தான். உனக்கு அவரே உதவி செய்வார்.' என்றார்.

எனக்கு சிபாரிசு கடிதம் எழுதி தர சித்தப்பா முன் வரவில்லை. நான் இங்கிலாந்து செல்வது மத சம்பிரதாயத்துக்கு எதிரான செயல் என அவர் நினைத்திருக்கலாம்.

திரு.லெல்லிக்கு கடிதம் எழுதி அவரை, அவர் வீட்டில் சந்திக்க அனுமதி பெற்றேன்.

படிகட்டில் இறங்கி வந்தவர், 'முதலில் நீ உன் பி.ஏ. வை (B.A) முடி. பின்னர், என்னை வந்து பார். இப்பொழுது எந்த உதவியும் செய்ய முடியாது.' என சொல்லி மீண்டும் மாடிக்கு சென்று விட்டார்.

அவரை சந்திக்க நான் என்னை ரொம்பவும் தயார் படுத்திக் கொண்டிருந்தேன். அவரை சந்திக்கும் போது பேச, சிரமப் பட்டு சில வாக்கியங்களை மனப்பாடம் வேறு செய்திருந்தேன். ஆனால், இவை அனைத்து பயனின்றி போனது.

என் மனைவியிடம் இருக்கும் நகைகள் என் நினைவுக்கு வந்தன.

போர்பந்தரில் இருந்து ராஜ்காட் திரும்பி, நடந்தவைகளையெல்லாம் வீட்டில் சொன்னேன். இங்கிலாந்து செல்ல கடன் வாங்கினால் கூட தவறில்லை என தேவ்ஜி கூறினார். என் மனைவியின் நகைகளை விற்றால் மூவாயிரம் ரூபாய் வரை தேறும் என அவரிடம் கூறினேன்.




Want to write for Maniyosai?

Download our android app


 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits