maniyosai.com

You are here: Home பொது சத்தியசோதனை சத்தியசோதனை-பகுதி 11

சத்தியசோதனை-பகுதி 11

E-mail Print PDF
Share/Save/Bookmark

Gandhijiநான் தற்போது விளக்கும் சம்பவம் நடக்கும் போது எனக்கு 16 வயது. என் அப்பா படுத்த படுக்கையாகியிருந்தார்.
என் அம்மா வீட்டு பணிகளைக் கவனிக்க, நான் அப்பாவை அருகில் இருந்து பார்த்துக் கொண்டேன். அப்பாவிற்கு அருகில் இருந்து மருந்துகள் கொடுப்பது, கட்டு கட்டுவது போன்ற கடமைகளை செய்து வந்தேன். தினமும் இரவில், அவர் காலை பிடித்து விட்டு, அவர் கூறும் போதுதான் தூங்க செல்வேன். இந்த பணியை நான் என்றும் செய்ய தவறியதே இல்லை.

 

அப்பாவின் உடல்நிலை சற்று தேவலையாக இருந்தாலோ, அப்பா அனுமதி அளித்தாலோ மாலையில் கொஞ்ச தூரம் காலார நடந்து வருவேன். அப்பொழுது, என் மனைவி கர்ப்பமாக இருந்தாள். ம்ச், அந்த சூழ்நிலையை இப்போது நினைத்தாலும் அவமானமாக உள்ளது. ஒவ்வொரு இரவும், நான் அப்பாவின் கால்களை பிடுத்துக் கொண்டிருக்கும் போது, என் மனம் படுக்கை அறை மீதே இருக்கும். அந்த நாட்களில், ஆண்-பெண் அந்தரங்க உறவை, மதமும், மருத்துவமும் அருவருக்க தக்கதாக ஒதுக்கி வந்தன. இரவில், அப்பா தூங்கிய பின்பு, படுக்க செல்வதில் எனக்கு அலாதியான குஷி.

ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம் என அனைத்து மருத்துவங்களும் பார்த்த பின்பும் அப்பாவின் உடல் நலம் தேறவில்லை. கடைசியில், அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறி விட்டனர். என் குடும்ப மருத்துவர், அறுவை சிகிச்சை வேண்டாம் என சொன்னார். அவர் அறிவுரையைக் கேட்டு, கணக்கில்லாமல் செலவு செய்து மருந்துகளை வாங்கினோம். என் அபிப்ராயப் படி, அறுவை சிகிச்சை செய்திருந்தால் அப்பாவுக்கு குணம் ஆகியிருக்கும். ஆனால், கடவுளின் விருப்பம் வேறு மாதிரி இருந்தது. மரணமே தீர்வு என இருக்கும் போது, அதை யாரால் மாற்ற முடியும். நாளுக்கு நாள் அவர் உடல் நிலை மோசமானது. அன்றாட இயற்கை உபாதைகளைக் கூட படுக்கையையிலேயே கழிக்க ஆரம்பித்து விட்டார். வைணவ சம்பிரதாயப் படி சுத்தம் மிக அவசியம். அதனால், என் அப்பாவுக்கு இது மிகவும் அவஸ்தையாக இருந்தது. மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவருக்கு வேறு வழி தெரியவில்லை.

அந்த சோகமான நாள் வந்தது. என் சித்தப்பா அப்போது ராஜ்காட்டில்தான் இருந்தார். அப்பா உடல் நிலை மோசமானதை அறிந்து வீட்டுக்கு வந்திருந்தார். சகோதரர் மீது அவருக்கு பாசம் அதிகம். இரவு முழுவதும் கட்டில் அருகிலேயே உட்கார்ந்திருந்தார். அது என் அப்பாவின் கடைசி இரவாக இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

மணி 10.30. அப்பா காலை பிடித்துக் கொண்டிருந்த என்னை, என் சித்தப்பா விடுவித்தார். எனக்கு உற்சாகம் பீறிடவே, படுக்க சென்றேன். என் மனைவி அரை தூக்கத்தில் இருந்தாள்.நான் அவளை எழுப்பி விட்டேன்.

ஐந்து, ஆறு நிமிடம் கழிந்தது. கதவு தட்டும் சத்தம் கேட்டது. தட்டியது வேலை ஆள்.

‘எழுந்திரு' என அவர் சொன்னார்.

‘என்ன ஆச்சு. எதுவாயிருந்தாலும், அங்க இருந்த படியே சொல்லு.' என்றேன்.

‘அப்பா இறந்திட்டார்...'

அனைத்தும் முடிந்து விட்டது. அலறியடித்து அப்பாவின் அறைக்கு சென்றேன். எனக்கு அப்பொழுது அவமானம் அதிகரித்தது. இப்பொழுதும் கை எழுதுகிறதே தவிர மனம் கூனி குருகியுள்ளது. அப்பா இறக்கும் போது நான் கூட இல்லையே. அவர் இறக்கும் போது, நான் அவர் காலை பிடுத்துக் கொண்டு இருந்திருக்க வேண்டாமா? ஒரு சிற்றின்பம் என்னை மிருகம் ஆக்க பார்த்ததே. அவர் கடைசி மூச்சை என் மடியில் சாய்ந்து விட்டிருக்க வேண்டாமா? அந்த பாக்கியம் அவர் தம்பிக்கு சென்று விட்டதே!

என் அப்பா இறக்கும் போது கூட சிற்றின்பம் அதிகரிக்க நான் தவறு இழைத்து விட்டேன். எத்தனை ஆண்டுகள் ஆகியும் என் மீது நீங்காத கறை படிந்து விட்டது.

அவசியம் வரும் போது, குடும்ப பந்தங்கள், சராசரி ஆசாபாசங்களிலிருந்து விடு பட வேண்டும் என்பதை இந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது.

செய்தியில் காந்திஜி

ஒபாமாவை கவர்ந்த மகாத்மா

Obama and Gandhijiஅமெரிக்க அதிபர் ஒபாமா அண்மையில் (செப்.2009) ஒரு பள்ளி நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது, அவரிடம், அங்கு படிக்கும் மாணவர் ஒரு கேள்வி கேட்டுள்ளார். 'நீங்கள் யாருடன் டின்னர் சாப்பிட விரும்புகிறீர்கள்? அந்த நபர் இருப்பவராகவோ, இறந்தும் நம் மனதில் இருப்பவராகவோ இருக்கலாம்.' இதுவே அந்தக் கேள்வி. ‘அந்தப் பட்டியல் சற்று நீளமானதாக இருக்குமே.' என சிரித்தப் படி யோசித்த ஒபாமா, ‘என் ஹீரோ காந்திஜிதான். உலகையே உலுக்கிய மாமனிதர் அவர். ஆனால், அவருடன் சாப்பிடுவதில் என்ன சங்கடமென்றால், அவர் மிகவும் குறைவாக சாப்பிடுவார்.' எனக் கூறினார். இந்தியாவில்தான் காந்தியை சீண்ட ஆளில்லை.ஹூம்...




Want to write for Maniyosai?

Download our android app


Last Updated ( Wednesday, 06 January 2010 16:11 )  


More and More


கிட்டதட்ட

12 February 2012, 18.32 செய்திகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி
அடிலைட்: அடிலைட் நகரில் நடைப்பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு...மேலும்...
0 Comments , 226 Hits
16 January 2012, 20.59 செய்திகள்
குஜராத்தும், தமிழ்நாடும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகின்றன - நரேந்திர மோடி
சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆட்சி புரியும்...மேலும்...
0 Comments , 172 Hits
23 March 2012, 18.20 செய்திகள்
குஜராத் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆபாசப் படம் பார்க்கவில்லை: தடவியல் அறிக்கை
காந்திநகர்: அண்மையில் சர்ச்சைக்குள்ளான 2 குஜராத் சட்டமன்ற...மேலும்...
0 Comments , 99 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits