சிறுகுறிப்பு - அன்னை தெரசா
ஆடம்பரமும் பொய்யும் நிறைந்த சினிமா வெளிச்சம் விழுந்த சினிமா நட்சத்திரமும் இல்லை. தேர்தலுக்கு தேர்தல் மறக்காமல் (!) மக்களிடம் பாசமழைப் பொழியும் அரசியல்வாதியும் இல்லை. ஆனால் அவரை தெரியாதவர்கள் இல்லை. இந்தியாவில் மட்டுமல்ல. உலக நாடுகள் அனைத்திலுமே அன்னை தெராசாவைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். வாழும்போது மட்டுமல்ல இறந்து 13 ஆண்டுகளாகியும் மக்களிடையே நன்மதிப்பு இருக்கிறதென்றால் அது பூர்வ ஜென்ம புண்ணியமல்ல. இந்த ஜென்மத்திலேயே அவர் செய்த மகத்தான சேவைகள் அவருக்கு இன்னும் பல ஜென்மங்களுக்கு புண்ணியம் தேடித் தரும்.




