இன்று செய்திகளில் முக்கிய இடம் பிடித்திருக்கும் சசி தரூர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். இப்பொழுது வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்து ராஜினாமா செய்துள்ள சசி தரூர் 1956ம் ஆண்டு மார்ச் 9ம் நாள் லில்லி- சந்திரன் தரூர் தம்பதியினருக்கு லண்டனில் பிறந்தார்.
கல்வி: சசி தரூர் ஏற்காடு மாண்ட்ஃபோர்டு பள்ளி, மும்பை கேம்பியன் பள்ளி, கொல்கட்டாவின் செயிண்ட் சேவியர் பள்ளி என பல முக்கிய நகரங்களில் படித்துள்ளார். பின்னர் டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீவன் கல்லூரியில் வரலாற்றில் பட்டம் முடித்தார். அமெரிக்காவின் டஃப்ட் பல்கலைக்கழகத்தில் ஃப்ளெட்ச்சர் ஸ்கூல் ஆஃப் லா அண்ட் டிப்ளமசியில் வெளியுறவு துறையிலும் மட்டும் சட்டத்திலும் பட்டமேற்படிப்பு முடித்து முனைவர் பட்டமும் பெற்றார். அந்த பல்கலைக்கழகத்தின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் (22 வயதில்) முனைவர் பட்டம் பெற்ற முதல் நபர் சசி தரூர்.
தொழில்: சசி தரூர் 1978ல் ஐக்கிய நாடுகளில் சாதாரணப் பணியில் சேர்ந்து பின் ஐக்கிய நாடுகள் துணை பொதுசெயலர் (தொடர்பு மற்றும் பொது தகவல்) பதவியை வகித்தார். 2006 ம் ஆண்டு ஐக்கிய நாட்டு அவை பொது செயலர் பதவிக்கு இந்தியா சசிதரூரை முன்நிறுத்தியது. சசி தரூர் ஐக்கிய நாட்டு சபையின் பொது செயலாளராக வெற்றிப் பெற்ற பான் - கி - மூனுக்கு அடுத்தப்படியாக மிகக் குறைந்த வித்யாசத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்த தேர்தல் தொடர்பாக பிபிசி நடத்திய கருத்துக் கணிப்புகளிலும் தரூரே வெற்றிப் பெற்றார். இருப்பினும் வீடோ அதிகாரம் பெற்ற நாடுகளின் விருப்பத்தால் பான் - கி - மூன் வெற்றிப் பெற்று ஐக்கிய நாட்டு சபை பொதுச் செயலாளராகும் வாய்ப்பை தரூர் இழந்தார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் வெற்றிப் பெற்று சில தினங்களுக்கு முன்பு வரை வெளியுறவுத் துறை இணையமைச்சராக பணிப்புரிந்தார். அவர் பதவியில் இருந்த காலத்தில் மிகவும் வெளிப்படையாக ஏதேனும் பேசி வாங்கிக் கட்டிக்கொள்வதிலும் ஜித்தராக இருந்தார். ’விமானத்தில் சாதாரண வகுப்பு மாட்டுத் தொழுவம் போன்றது’, ’காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அவசியம்தானா’ என்று யாரும் எதிர்பார்க்காதக் கேள்விகளைக் கேட்டு சங்கடப்படுத்தினார்.
இப்பொழுது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொச்சின் அணியைத் தன் காதலிக்கு வாங்கிக் கொடுத்த விவகாரத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|
