maniyosai.com

You are here: Home பொது சிறுகுறிப்பு இலங்கைக்கு பெருமை சேர்த்த தமிழன் - முத்தையா முரளிதரன்

இலங்கைக்கு பெருமை சேர்த்த தமிழன் - முத்தையா முரளிதரன்

Share/Save/Bookmark

muthiah muralidharan இலங்கை கிரிக்கெட்  அணியில் விளையாடிய ஒரே தமிழர் முத்தையா முரளிதரன்.

சின்னசாமி முத்தையாவும், லட்சுமி முத்தையாவும் ஈன்றெடுத்த அரியதோர் முத்து முத்தையா முரளிதரன், பிறந்த தேதி ஏப்ரல் 17 - 1972- பிறந்த ஊர் கண்டி. இவருடைய பாட்டனார் பெரியசாமி முத்தையா இந்தியாவைச் சேர்ந்தவர். தேயிலை தோட்டத்தில் பணிபுரிவதற்காக இலங்கைக்கு குடியேறியவர்.
முத்தையா முரளிதரன் ஆகஸ்டு 28, 1992 ல் முதல் டெஸ்ட் மேட்ச் விளையாடினார்.

முத்தையா முரளிதரன் வலது கை சுழற் பந்து வீச்சாளர், இவருடைய பந்து வீச்சு சரியானதல்ல என்ற  சர்ச்சைக்கு ஆளானவர், ஆயினும் இவருடைய பந்து வீச்சு விஞ்ஞான பூர்வமாக சரியானதே என்று பின்னர் நிருபிக்கப்பட்டது.

muthiah muralidharan weddingமுத்தையா முரளிதரனின்  முன்னோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டுமல்லாமல், இவர்  இந்தியாவைச் சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தியை திருமணம் செய்துள்ளார் என்பது இந்தியாவிற்கு பெருமை, இவருடைய மாமனார் காலம் சென்ற டாக்டர் ராமமூர்த்தி சென்னையில் உள்ள பிரபல  மலர் ஆஸ்பத்திரியின் இயக்குனராக பதவி வகுத்தவர். முத்தையா முரளிதரனின் முதல் மகன் நரேன்.

உலக டெஸ்ட் கிரிக்கெட்டு மேட்சுளில் அதிக தடவை முட்டை அதாவது பூஜ்யம் ரன்கள் எடுத்தவர் முத்தையா முரளிதரந்தான்  என்பது சற்று வித்தியாசமான செய்தியாக இருந்தாலும் ,டெஸ்ட் கிரிக்கெட் மேட்சுகளில் 800 விக்கெட்டுகளை எடுத்து உலக சாதனையை ஏற்படுத்தி ஈடு இணையற்ற பந்து வீச்சாளர் என்பதை நிருபித்துள்ளார்,
ஒரு நாள் கிரிக்கெட்  மாட்சுகளிலும் 512 விக்கெட்களை  வீழ்த்தி உலக சாதனை  படைத்துள்ளார் முத்தையாமுரளிதரன்.

உலக கிரிக்கெட்  வரலாற்றில்  முத்திரை பதித்துள்ளார்  முத்தையா முரளிதரன்  ஒரு நல்ல மனிதர், சேவை உள்ளம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் .

2004 ம் ஆண்டு கடலில் ஏற்பட்ட நில அதிரிவில் அதிருஷ்ட வசமாக உயிர் தப்பினார். அதன்பின்னார் ஓரே வாரத்தில் சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்  முத்தையா முரளிதரன். ஜக்கிய நாட்டு சபையின் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு இலங்கை நாட்டின் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கை பாராளுமன்றத்தால் கெளரவிக்கப்பட்ட ஒரே விளையாட்டு வீரர் (தமிழர்!) என்ற சிறப்பைப் பெற்றவர் முத்தையா முரளிதரன்.

உலக சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்  கனவு கண்ட படியே இலங்கை ”கலே” மைதானத்தில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் மாட்சில் 800 வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்து விட்டு முன்பே திட்டமிட்டபடி கிரிக்கெட் ஆட்டத்திலிருந்துப் ஓய்வு பெறப் போகிறார்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 204 Hits