
சித்திரை மாத பண்டிகைகள்
தமிழ் புத்தாண்டு: சித்திரை மாதம் முதல் நாளை உலகமெங்கும் வாழும் தமிழர்கள், தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். இது சூரியனின் நகர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தொன்று தொட்டு கொண்டாடப் பட்டு வருகிறது.

தமிழ் புத்தாண்டு: சித்திரை மாதம் முதல் நாளை உலகமெங்கும் வாழும் தமிழர்கள், தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். இது சூரியனின் நகர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தொன்று தொட்டு கொண்டாடப் பட்டு வருகிறது.
வட இந்தியா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய இடங்களில் மகர சங்கராந்தி பண்டிகை, தமிழகத்தில் பொங்கல் என கொண்டாடப் படுகிறது. பொங்கல் என்ற சொல்லை சொல்லும் போதே அதன் அர்த்தம் நமக்கு புரிந்து விடும். பொங்கல் என்றால் பொங்குதல் என பொருள். அறுவடை திருநாளாக கொண்டாடப் படும் பொங்கல் திருநாளன்று மண் பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது வழக்கம்.
வைகுண்ட ஏகாதசி: கிருஷ்ண பரமாத்மா ‘மாதங்களில் தான் மார்கழியாய் இருப்பேன்’ என்கிறார். அதனால் வைணவத் தலங்களில் மார்கழி மாதத்திற்கு என தனிச்சிறப்பு உண்டு. உலகிற்கெல்லாம் படியளக்கும் பரந்தாமன் வீற்றிருக்கும் வைகுண்டத்தின் கதவுகள் திறந்து வைகுண்டநாதனின் தரிசனம் கிடைப்பது இம்மாதத்தில்தான் என்பதால் மார்கழி மாதம் வைணவர்களுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகிறது. அதில் தை முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாதங்களும் பகல் என்றும் ஆடி முதல் மார்கழி முடிய உள்ள ஆறு மாதங்களும் ஒரு இரவு என்றும் கணக்கிடப்படுகிறது. மார்கழி மாதத்தில் அதாவது தேவர்களின் இருட்டுப் பொழுதில் உஷக் காலம் எனும் அதிகாலை நேரத்தில் நான்கு மணி முதல் ஆறு மணி வரை உள்ள முகூர்த்த வேளையில் வைகுந்த வாசல் திறக்கப்படுகின்றது. அச்சமயத்தில் ஆலயங்களில் திருப்பள்ளியெழுச்சியும், திருப்பாவையும் படித்து மகாவிஷ்ணுவிற்கு பொங்கல் பிரசாதங்களை நிவேதனம் செய்கின்றோம். தேவர்களின் அதிகாலை நேரத்தில் வைகுந்த வாசல்கள் திறந்தே இருந்தாலும் அரங்கன் அவ்வழியாக வெளியே வந்து தரிசனம் தரும் நாள் வைகுண்ட ஏகாதசி. தெற்கே பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கன் அதிகாலையில் சொர்க்கவால் எனும் வடக்கு வாசல் வழியாக வருகின்றார். இந்த வைபவத்தை தாம் நாம் சொர்க்க வாசல் திறப்பு விழாவாக கொண்டாடுகின்றோம்.
துளசி விவாகம் (உத்வான துவாதசி): கார்த்திகை மாதம் வளர்பிறை 11ம் நாள் வருவது துளசி விவாகம். இந்துக்கள் துளசியை (செடி) தெய்வமாகப் போற்றுகின்றனர். துளசிக்கும் மகாவிஷ்ணுவுக்கும் திருமணம் நடக்கும் நாள்தான் துளசி விவாகம். மத்வ மதத்தினர் உத்வான துவாதசி என்கின்றனர்.
துளசி, மகாவிஷ்ணுவிற்கு இரண்டு சுவாரஸ்யமான கதைகளும் இருக்கிறது. அதில் ஒரு கதையில் துளசி மகாலட்சுமியின் தங்கை. துளசிக்கோ மகாவிஷ்ணு மீது பிரியம். ஆனால் மகாலட்சுமிக்கு ஏற்கெனவே மகாவிஷ்ணுவுடன் திருமணம் நடந்துவிட்டது. தங்கையே தனக்கு பாதகமான எண்ணங்களுடன் வலம் வருவதைக் கண்டு வெகுண்டெழும் மகாலட்சுமி செடியாக மாறுமாறு தங்கைக்கு சாபமிடுகிறாள்.
தீபாவளி: ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினத்தில் கொண்டாடப்படுவது தீபாவளி. இப்பண்டிகை இந்தியா மட்டுமின்றி நேபாள், சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ், இலங்கை, மியான்மர், பிஜி போன்ற நாடுகளிலும் தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
Last Updated on Sunday, 24 October 2010 12:37புரட்டாசி சனிக்கிழமை: புரட்டாசி மாதம் தமிழ் மாதங்களில் வரும் ஆறாம் மாதம். சூரியன் கன்னி ராசியில் நுழைந்து அங்கிருந்து வெளியேறும் வரையிலான நாட்கள் புரட்டாசி மாதமாகும். திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்த மாதமாகக் கருதப்படுகிறது.ஏனெனில் இதுவே மகாவிஷ்ணு பூமியில் வெங்கடேசப் பெருமாளாக அவதரித்த மாதமாகும். அதனாலேயே திருப்பதியில் கூட இம்மாதமே பிரம்மோற்சவம் நடைப்பெறுகிறது. எம்பெருமான் வெங்கடேசப் பெருமாள் புரட்டாசி மாதத்தில் தனது பக்தர்கள் தனக்கு மிகவும் நெருங்கி வர விரும்புகிறார். ஆனால் அனைவரும் புரட்டாசி மாதத்தில் திருப்பதிக்கு செல்வது என்பது இயலாதக் காரியம் என்பதால் அருகிலுள்ள பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிப்படுகின்றனர். சிலர் தங்களது வீடுகளில் மாவிளக்கு ஏற்றியும் வழிப்படுகின்றனர்.
வரலட்சுமி விரதம்: இந்த பண்டிகை இந்து காலண்டர் படி சிராவண மாதம் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படுகிறது. ஆங்கில காலண்டர் படி ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படுகிறது. திருமணமான சுமங்கலிப் பெண்கள் தங்கள் குடும்பம் நோய் நொடியின்றி செல்வ வளத்துடன் செழிப்பாக இருப்பதற்காக மகாலட்சுமியை வழிப்படுவதுதான் வரலட்சுமி விரதம்
Last Updated on Monday, 30 August 2010 23:24மிக உயர்ந்த கலாச்சாரங்களைக் கொண்ட நம் இந்தியாவில் எத்தனையோ பண்டிகைகள், திருவிழாக்கள், விரதங்கள். எதுவும் சும்மா வெறும் கொண்டாட்டங்களுக்காக மட்டும் நடத்தப்படுவதில்லை. எல்லாவற்றிற்கும் பின்னனி உண்டு. எல்லா பண்டிகைகளுக்கும் கொண்டாடும் முறையும் உண்டு. வருடத்தில் உள்ள 12 மாதங்களில் ஆடி மாதம் முதல் தை மாதம் வரை எக்கச்சக்க பண்டிகைகள்.
நாம் புதிதாக ஒரு மிக விலையுயர்ந்த மொபைல் போன் வாங்குகிறோம். அதில் ஏராளமான வசதிகள் இருக்கிறது. அது ஒவ்வொன்றையும் எப்படி இயக்குவது என முழுமையாக அறிந்து இயக்கப் பழகிக் கொண்டால் அது நமக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் அல்லவா?
|
16 January 2012, 20.59 செய்திகள் ![]()
சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆட்சி புரியும்...மேலும்... 0 Comments ,
48 Hits
|
27 October 2011, 09.29 தலைப்புச் செய்திகள் ![]() புதுதில்லி: தீபாவளி பண்டிகை காலத்தில் இந்தியாவுக்கு செல்வதை...மேலும்... 0 Comments ,
95 Hits
|
14 December 2011, 20.57 செய்திகள் ![]() புதுதில்லி: இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற கருத்தை...மேலும்... 0 Comments ,
144 Hits
|
அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?
| விஜயகாந்த் இடைக்கால பதவிநீக்கம் : கருணாநிதி கண்டனம் 05/02/2012 சென்னை: சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக தலைவர் விஜய [ ... ] |
| மற்ற செய்திகள் |