தமிழ் புத்தாண்டு: சித்திரை மாதம் முதல் நாளை உலகமெங்கும் வாழும் தமிழர்கள், தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். இது சூரியனின் நகர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தொன்று தொட்டு கொண்டாடப் பட்டு வருகிறது.
தை முதல் நாளைதான் தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என திமுக அரசு 2008ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. ஆனால், வழக்கத்தில் சித்திரை முதல் நாளையே மக்கள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப் படுகிறது. இதே மாதத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியைக் காண இந்தியாவின் பல பகுதிகளிலுமிருந்தும் பக்தர்கள் குவிவது வழக்கம்.
சித்திரை பெளர்ணமி: சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமி தினமே சித்திரகுப்தனின் பிறந்தநாள் என்பது ஐதீகம். இந்த நாளில் யாகங்கள் வளர்த்து சித்திரைகுப்தனுக்கு வழிபாடுகள் நடக்கும். அவ்வாறு செய்பவர்கள் மீது சித்திரகுப்தன் கொஞ்சம் கருணை காட்டுவார் என்பது நம்பிக்கை.
English Summary:
First of the chithirai month is celebrated as Tamil newyears day by Tamils worldwide. Chithirai thiruvizha is celebrated with enthusiasm in madurai, in this chithirai month.Chithira pournami is believed as birthday of Chithiragupta, assistant of Lord Yama.
Want to write for Maniyosai?
Download our android app





