maniyosai.com

You are here: Home இலக்கியம் மணியோசை கதைகள்

மணியோசை கதைகள்

petha thaayi

பெத்ததாயி

அன்னக்கி பார்வதியம்மா சந்தை ஏவாரம் முடிஞ்சு இரவு ஏழு மணிக்குதான் வீட்டுக்கு வந்துச்சு. நல்ல ஏவாரம் இருந்தாலும் முகத்துல சந்தோஷம் இல்ல. காரணம் தனது ரெண்டு மகன்கள் செந்திலுக்கும், குமாருக்கும் கல்யாணம் பண்ணி வச்சு, கொஞ்ச நாளிலேயே பொண்டாட்டிப் பேச்சைக் கேட்டுக்கிட்டு தனிக் குடித்தனம் போயிட்டாங்க.

Tags:
Last Updated on Wednesday, 01 February 2012 12:42

Read more...

 

இலக்கியம் - கதைகள்

irumooru rooba nottu

இருநூறு ரூபா நோட்டு

“நா ஒண்ணு கேட்டா தப்பா நெனச்சிக்கமாட்டீங்களே?” என்ற பலத்த பீடிகையுடன் ஆரம்பித்தாள் வித்யா.

வித்யா பற்றி சொல்வதற்கு ஒன்றும் அதிகமில்லை. இளம்பெண். இப்பொழுதுதான் கல்லூரி படிப்பை முடித்துள்ளாள். இளம்பெண், கல்லூரி, கில்லூரி என்றெல்லாம் சொன்னவுடன் உலக அழகி அவள்தான் என்று கற்பனை செய்ய வேண்டாம். பார்க்க மிக சுமாராகத்தான் இருப்பாள். குடும்ப வறுமைக் காரணமாக இப்பொழுது வேலையில் சேர்ந்து பத்து நாட்கள் ஆகிறது.

“இல்ல சொல்லுங்க.” என்றேன்.

Last Updated on Friday, 15 January 2010 14:56

Read more...

 

இலக்கியம் - கதைகள்

kaikulla

கைக்குள்ள...

’என் கண்களை என்னாலேயே நம்பமுடியவில்லை. வித்யாவா அது? கோயில் பிரகாரத்தில் கணவன், மாமனார், மாமியார், நாத்தனார் என குடும்பத்தோடு அமர்ந்து சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்கிறாள். அட! உலகில்  அதிசயங்கள் பல நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இப்போதுதான் நேரில் பார்க்கிறேன்....’

நானும் வித்யாவும் ஒரே பள்ளி, கல்லூரியில் படித்தவர்கள். சற்றே நெருங்கிய தோழிகள். வித்யா நன்றாகப் படிப்பாள். விளையாட்டிலும் அவள்தான் ஃபர்ஸ்ட். சில பேச்சுப் போட்டிகளில் கூட கலந்துக் கொண்டு முதல் பரிசு வாங்கியிருக்கிறாள். எல்லாவற்றிலும் தான் தான் முதலாவதாக இருக்கவேண்டும் என்ற பிடிவாதம். படிப்பு முடிந்த கையோடு அவளது திருமணம் நடந்தது. எனக்கு மும்பையில் வேலைக் கிடைத்தது. போன வருடம் விடுமுறைக்கு வந்தப்போது, அவளைப் பார்க்க அவள் வீட்டிற்கு சென்றேன்.

Last Updated on Sunday, 28 February 2010 12:58

Read more...

   

இலக்கியம் - கதைகள்

puthiya thittam

புதிய திட்டம்

”வூ இஸ் தி ப்ரைம் மினிஸ்டர் ஆஃப் இந்தியா ன்னா என்ன அர்த்தம்? இந்தியாவோட பிரதமர் யாருன்னு அர்த்தம். அதுக்கு என்ன பதில் சொல்லுவ?..... மன்மோகன் சிங். எங்க சொல்லுப் பாக்கலாம்.”

‘மன்..... மன்.... மன்மோகனா...’


‘ ஏய்... நிறுத்து.....நிறுத்து..... என்ன கேட்டாலும் தப்பு தப்பாவே சொல்லனுமா? ஒரு சின்ன பேரக் கூட உன்னால சரியா சொல்லமுடியாதா...? அட்மிஷனுக்கு இன்னும் ரெண்டு நாள்தான் பாக்கியிருக்கு.

Read more...

 

இலக்கியம் - கதைகள்

magan

மகன்

பூங்கிளி ஊரே பற்றி எரிந்துக் கொண்டிருந்தது. அதன் இயற்கை எழில் கொஞ்சும் சாலைகளெங்கும் எரித்து சாம்பலாக்கப்பட்ட மோட்டார் வாகனங்கள், இன்னும் எரிந்துக் கொண்டிருக்கும் டயர்கள், கடைகளில் சூறையாடப்பட்டு எடுத்து செல்லப்பட்ட பொருட்களின் எச்சங்கள்,
எல்லாவற்றுக்கும் மேலாக வெட்டுண்ட மனித தலைகள், கை, கால்கள் எல்லாம் இரைந்து கிடந்தன.

பூங்கிளியின் அழகுக்கு, அழகு சேர்க்கும் தேனாறுக்கு போட்டியாக இரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்தது. பல நாட்களாக புகைந்துக் கொண்டிருந்த ஜாதி கலவரம் இன்று வெடித்துவிட்டது. கட்சித் தலைவர்களே நேரடியாக கலவரத்தில் இறங்கி
விட்டதில் எதிர்கட்சி தலைவரின் கழுத்து வெட்டப்பட்டிருந்தது.

Read more...

   

இலக்கியம் - கதைகள்

kadhal story

காதல்

ஸ்ருதி:   ஹாய் கார்த்திக்! எப்படியிருக்க?

கார்த்திக்:  காலைலேர்ந்து உங்கிட்ட பேசாம பைத்தியம் பிடிச்சமாதிரியிருந்தேன். ஏன் இவ்ளோ நேரம் ‘ஆன்லைன்ல’ ‘சேட்’ பண்ணவே வரல?

ஸ்ருதி:   சாரிடா,காலைல அப்பா வீட்ல இருந்தாங்க. கம்ப்யூட்டர் பக்கமே வரமுடியல. அதிருக்கட்டும் நீ இன்னிக்கி காலேஜுக்கு போகலியா?

கார்த்திக்:  இல்ல ஸ்ருதி. உன்கிட்ட ‘சேட்’ பண்ண ஆரம்பிச்சதிலேருந்து உன் ஞாபகமாவேயிருக்கு.அதுவும் நீ என் காதல ஏத்துக்கிட்டதிலேருந்து இந்த முகம் தெரியாத தேவதைய நெனச்சு, நெனச்சு என்னால தூங்கமுடியல... சாப்பிடமுடியல...

Last Updated on Friday, 15 January 2010 13:32

Read more...

   

கிட்டதட்ட

18 November 2011, 20.26 செய்திகள்
தமிழக அரசுக்கு இந்து முன்னணி பாராட்டு
சென்னை: இந்து ஆலயங்களுக்கு சொந்தமான சொத்துக்களை இனி விற்பதில்லை;...மேலும்...
0 Comments , 111 Hits

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits