maniyosai.com

You are here: Home இலக்கியம் மணியோசை கதைகள் புதிய திட்டம்

புதிய திட்டம்

E-mail Print PDF
Share/Save/Bookmark

puthiya thittam”வூ இஸ் தி ப்ரைம் மினிஸ்டர் ஆஃப் இந்தியா ன்னா என்ன அர்த்தம்? இந்தியாவோட பிரதமர் யாருன்னு அர்த்தம். அதுக்கு என்ன பதில் சொல்லுவ?..... மன்மோகன் சிங். எங்க சொல்லுப் பாக்கலாம்.”

‘மன்..... மன்.... மன்மோகனா...’


‘ ஏய்... நிறுத்து.....நிறுத்து..... என்ன கேட்டாலும் தப்பு தப்பாவே சொல்லனுமா? ஒரு சின்ன பேரக் கூட உன்னால சரியா சொல்லமுடியாதா...? அட்மிஷனுக்கு இன்னும் ரெண்டு நாள்தான் பாக்கியிருக்கு.

இதுக்கே நீ இந்த முழி முழிக்கிற. இன்னும் மேத்ஸ், சயின்ஸ் எல்லாம் தெரிஞ்சுக்கனும். ரைம்ஸ் எல்லாம் டான்ஸ் ஆடிட்டே சொல்லத் தெரியனும்... உனக்கு இன்னும் சீரியஸ்னெஸ்ஸே வர்ல. பக்கத்து வீட்டு அனுவோட விளையாடவே நேரம் சரியாயிருக்கு. அவ நல்லா படிச்சுட்டு வந்து விளையாடறா. நீயும் இருக்கியே....”

“இல்லம்மா இப்ப கரெக்டா சொல்றேம்மா...?

“என்னத்த கரெக்டா சொல்லப்போற..... சரி..... சரி.... ஒன்..டூ...த்ரீ... சொல்லு. அதையாவது கரெக்டா சொல்றியாப் பாக்கலாம்.”

“ஒன்..டூ...த்ரீ...ஃபோர்... சிக்ஸ்...”

“ஏய்.... ஃபைவ் எங்க போச்சு?”

“வனிதா....... என்ன பண்ணிட்டு இருக்க?” எனக் கேட்டவாறே உள்ளே நுழைந்தாள் எதிர்வீட்டு ராதா.

“வா... ராதா... ஸ்ருதிய எல்.கே.ஜில சேர்க்கனும். இத்தன வருஷமும் குழந்தையோட அப்பா, அம்மா நல்லா படிச்சு, நல்ல வேலைல இருந்தா  போதும்னு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா இந்த வருஷத்திலேருந்து புது திட்டம் கொண்டு வந்திருக்காங்களாம். அப்பா, அம்மா நல்லா படிச்சு, நல்ல வேலைல இருந்தா போதாது. ஏன்னா அவங்க ரெண்டு பேரும் வேல, வேலன்னு எப்பவும் பிசியா அலைஞ்சிட்டு இருப்பாங்க. அதனால குழந்தைய பாத்துக்கற ஆயாதான் எல்லா விஷயமும் தெரிஞ்சு வச்சிருக்கனும்னு சொல்லி ஆயாவ இண்டர்வ்யூ பண்றாங்களாம். அதான் ஸ்ருதியோட ஆயா மீனாவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன். இவ என்னடான்னா சும்மா பக்கத்துவீட்டு வேலைக்காரி அனுவோட பல்லாங்குழி ஆடப்போயிடறா.....”




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

01 February 2012, 12.09 கதைகள்
பெத்ததாயி
அன்னக்கி பார்வதியம்மா சந்தை ஏவாரம் முடிஞ்சு இரவு ஏழு மணிக்குதான்...மேலும்...
2 Comments , 210 Hits

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 204 Hits