ஸ்ருதி: ஹாய் கார்த்திக்! எப்படியிருக்க?
கார்த்திக்: காலைலேர்ந்து உங்கிட்ட பேசாம பைத்தியம் பிடிச்சமாதிரியிருந்தேன். ஏன் இவ்ளோ நேரம் ‘ஆன்லைன்ல’ ‘சேட்’ பண்ணவே வரல?
ஸ்ருதி: சாரிடா,காலைல அப்பா வீட்ல இருந்தாங்க. கம்ப்யூட்டர் பக்கமே வரமுடியல. அதிருக்கட்டும் நீ இன்னிக்கி காலேஜுக்கு போகலியா?
கார்த்திக்: இல்ல ஸ்ருதி. உன்கிட்ட ‘சேட்’ பண்ண ஆரம்பிச்சதிலேருந்து உன் ஞாபகமாவேயிருக்கு.அதுவும் நீ என் காதல ஏத்துக்கிட்டதிலேருந்து இந்த முகம் தெரியாத தேவதைய நெனச்சு, நெனச்சு என்னால தூங்கமுடியல... சாப்பிடமுடியல...
ஸ்ருதி: போதும்...போதும்... சினிமா டயலாக்லாம் நல்லா பேசற.
கார்த்திக்: இல்ல டியர். டயலாக் இல்ல. உண்மையாதான் சொல்றேன். நாம எத்தனை நாளைக்குத்தான் இப்படி முகம் பார்க்காம ‘சேட்டிங்’லயே காதலிக்கிறது? நாம நேரே சந்திக்கலாமா?
ஸ்ருதி: சரி. இன்னிக்கி ஈவினிங் பார்க்கலாமா?
கார்த்திக்: வாவ்! இவ்ளோ சீக்கிரம் நீ ஒத்துக்குவேன்னு நா நினைக்கலே. சாயந்திரம் 5 மணிக்கு பெசண்ட் நகர் பீச்சுக்கு வரமுடியுமா?
ஸ்ருதி: ஓகே. நா உன்ன எப்படி அடையாளம் கண்டுபிடிப்பேன்?
கார்த்திக்: நா கறுப்பு கலர்ல நீல கோடுப் போட்ட டீசர்ட்டும், லைட் ப்ளூ ஜீன்ஸும் போட்ருப்பேன்.
ஸ்ருதி: நா தாமரைப்பூ கலர்ல சல்வார் கமீஸ் போட்டு தலைல மல்லிகைப்பூ வச்சிருப்பேன். ஓகேவா?
மாலை 5 மணி. காதலர்கள் முதன்முதலாக சந்திக்கப் போகும் ஆர்வத்திலும், குதூகலத்திலும் பெசண்ட் நகர் பீச் இன்னும் அழகாக இருப்பது போல் தோன்றியது.
இதோ அங்கே கறுப்பு கலர் டீசர்ட்.... ஆ... இதோ தாமரைப்பூ கலர் சல்வார்... இருவரும் நெருங்கினர்.
ஸ்ருதி: ஐயோ நீயா கார்த்திக்?
கார்த்திக்: அடப்பாவி! நீதானா ஸ்ருதி?
ஸ்ருதி: அண்ணா! நீதானா கார்த்திக்னு பேர மாத்தி என்னை லவ் பண்ண?
கார்த்திக்: நீ மட்டும் என்னவாம்? ஸ்வாதிங்கிற பேர ஸ்ருதினு மாத்திதான என்ன ஏமாத்தின? இல்லாட்டி நா போய் என் கூட பொறந்த தங்கச்சியவே லவ் பண்ணிருப்பேனா........?
Want to write for Maniyosai?
Download our android app





:) not bad