
வாழ்ந்தால் ஆல் போல் தழைத்து வாழ்!
வையகத்தில் ஆலும் ஒரு கோள்
அவன் இவன் என்று பாராமல்
அனைவருக்கும் நிழல்கொடுப்பாள்
அவளது நிழலில் நடக்கும் நீதி விசாரணைகள்
அவைக்கு அவளே தெய்வ சாட்சி!
விரிந்து பரந்த அவள் விழுதுகளை
ஊரறியும், வேரறியாது!
விழுதுகள் அவளைத் தாங்குவதாய்
எண்ணிக் கொள்ளும்
ஆனால் அத்தாயோ விழுதுகளைத்
தாங்கி அணைத்து நிற்பாள்!
ஆயிரம் ஆண்டுகள் வயதுகண்டாள்
ஆயினுமவள் இளமை குன்றாள் !
கீச்சு மூச்சுப் பறவைகள் அவள்
கிளைகளைத் தேடிக் கூடுகட்டும்.
குஞ்சுகளை அயராது பார்த்துக்கொள்வாள்
கொஞ்சியவள் தாலாட்டுப் பாட்டிசைப்பாள்
ஆலமரமே கிராமத்தின் முதுபெரும் ஆச்சி,
அவளுருவே அழகான காட்சி !
ஆயிரம் பவுர்ணமிகள் கண்டுவிட்ட
ஆலணங்கே கிராமத்தின் மாட்சி !
Want to write for Maniyosai?
Download our android app
| Next > |
|---|



ஆல மரம் ஆயிரமாண்டுகளுக்கு முன் வாழ்ந்த வாழ்ககையை கன்முன் நிறுத்தி இருக்கிறது. வாழத்துக்கள் கவிஞருக்கு.