காப்பி யடித்து எழுதப் பட்டக் கவிதையல்ல இது;
காப்பிக்காக எழுதப்பட்டக் கவிதை!
காப்பி காப்பியக்காலத்தில் இருந்ததா? தெரியாது!
காப்பியிக்காலத்தில் இல்லாத வீடு இல்லை; நாடும் இல்லை!
காப்பி எனக்குப் பிடித்தது மட்டுமல்ல;
என்னோடு படித்தது; ’டிகிரி’ காப்பியாயிற்றே!
காலையில் கேட்கும் ராகம் ’பூபாளம்’ என்னும் இசை வாணர்கள்
காலையில் மாலையில் எப்போதும் கேட்கும் ராகம் ‘காப்பி’ என்றால் இசைவார்கள்!
சுட்டெரிக்கும் வெய்யிலிலே துவண்டுவிழும் நாவரசிக்கும்
சுகமளித்து தாகம் தீர்ப்பான் காப்பிச் சக்ரவர்த்தி!
இளநீரும், பழச்சாறும் தோற்பார்கள் சுயம்வரத்தில்!
பில்டர் காப்பியும், இன்ஸ்டண்ட் காப்பியும், கோல்ட் காப்பியும், காப்புசினோ காப்பியும் வேறல்ல;
மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் போல், பூசப்பட்ட "அரிதாரங்கள்’’ தான் வேறு!
பிஸினஸ் பேசும் இடத்திலும் காப்பியின் துணை வேண்டும்
பெண் பார்க்கும் படலத்திலும் காப்பியின் கணை வேண்டும்!
ரேடியோவைக் கண்டு பிடித்தவன் மார்க்கோணி
விமானத்தைக் கண்டு பிடித்தவன் ரைட் சகோதரர்கள்,
இந்த காப்பியைக் கண்டு பிடித்த மஹா ரசிகன் யார் சகோதரா?
காலித் தம்ளரை அந்த பக்கம் வைத்து விட்டு பதில் சொல்லு சகோதரா! சொல்லு!!
கவிஞர் ஆட்கொண்டேசன்
Want to write for Maniyosai?
| < Prev |
|---|



