maniyosai.com

You are here: Home இலக்கியம் கவிதை அடடா என்ன அழகு!

அடடா என்ன அழகு!

E-mail Print
Share/Save/Bookmark

priyamani
தென்னங் கீற்றுகள் தென்றலில் ஆடிட
தெரிந்தது நிலவின் தெவிட்டா அழகு!
இன்னும் கொஞ்சம் இன்னமும் கொஞ்சம்
எழிலைப் பருக விழைந்தது நெஞ்சம்!

முன்னும் பின்னும் தென்னை அசைய
முகிலும் துகிலாய் முகர்ந்திட அவளை
என்னுள் மிகுந்தது ஏக்கமும் தாக்கமும்
ஏங்கினேன் இரவெல்லாம் காண்கிலேன் தூக்கமும்!

திரையும் மறைவும் தானவள் அழகோ!
இரகசியம் என்பதே மறைபொருள் தானோ!
மறைத்திட மறைத்திடத் தானே பெண்ணெழில்!
விரித்திட விரித்திட வெட்கக் கேடுதான்!

ஒரு துளித் தேனே நாவினில் இனிக்கும்;
ஒரு படித் தேனை பருகவும் கூடுமோ!
அருங்கனிக் கூட்டும் அமிர்தச் சுவையும்
ஒரு படித் தாண்டினால் திரியுமே நஞ்சாய்!

விளம்பரப் பெண்களும் திரைப்படப் பெண்களும்
வெட்கம் என்பதை விற்றே விட்டனர்!
அளவுடன் அழகைக் காண்பதே அழகு.
இலைமறைக் காய்மறை என்றுமே அழகு!

வெளிச்சம் போடும் பெண்கள் சற்றே
வெட்கம் என்பதை பழகிட வேண்டும்!
அளவுடன் காட்டி வளமுடன் வாழ்வதே
நிலைக்கும் என்பதை நினைத்திட வேண்டும்!!

-கவிஞர் ஆட்கொண்டேசன்

 

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

68.4%
31.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits