maniyosai.com

You are here: Home இலக்கியம் கவிதை நிலவே நின்னை நேசிக்கிறேன்

நிலவே நின்னை நேசிக்கிறேன்

E-mail Print
Share/Save/Bookmark


Full moon
நிலவே நின்னை நேசிக்கிறேன்
அன்னை உன்னை அறிமுக படுத்திய அந்த நாள் தொட்டு!
அழகென்று ஒன்று உள்ளதென்றும் அதன் பாதிப்பு என்னவென்றும்
அறியத் தொடங்கினேன் என் அறியா பருவம் தொட்டு!
ஆளாக நான் அரும்பிய போது
அறிந்து மனதிற்குள் நாணினேன்!

அடடா, வயதை மீறிய என்
அளவிலா காதலை, அதீத மோகத்தை
உள்ளபடியே சொல்லிவிட்டேன், மனதை விட்டு!

நீலத்தாவணியில் மிளிந்த உன் முகவெட்டு
நான் ரசித்த நாட்களை எண்ணவும் கூடுமோ நீர் தொட்டு!
மேகக்கூந்தலில் நின்முகவழகு தென்பட்டு
மோகித்த என் நினைவுகள் ஒவ்வொன்றும் தேன்சொட்டு!

கார்த்திகை தீபங்களின் நடுவே நீ வந்த ஒய்யாரம்
குளிராய் வீசிய காற்று காதலை சொன்னதென் காதோரம்!

போதைத் தலைக்கேறிவிட்டதா கவிஞனே
ஏதேது விட்டால் வானிலேறி தாலி கட்டி விடுவீரோ?

ஏதோவொரு அசரீரி கேட்டது என்னுள்
சோதா குரலென்று உதறி விட்டேன் மண்ணில்!

"அழகியென்று ஊரில் ஒருத்தி இருந்திட்டால்
அலைவார்கள் பலரும் அவள் பின்னே;
அவளும் யாரைத்தான் காதலிப்பாள்
ஆவதைப்பார், பேனாமையை வீணாக்காதே!

அறிவுரை போதும் அசரீரியே அடக்கினேன்.
அந்த வெண்முகி காதலித்தால் என்ன!
...கா விட்டால் தான் என்ன
காதலிப்பது இந்த கவிஞனின் பிறப்புரிமை!

ஒரு வேளை நிலாப்பெண்ணுக்கு ஒரு சுயம்வரம் நடந்திட்டால்
உறுதியாய் மாலை விழப் போவது
என் கழுத்தில் தான் ,சூளுரைத்தேன்
சுற்றி வரும் சூரியன்மேல் சத்தியம் என்றேன்.

குழம்பி நின்ற அசரீயை தட்டி உரைத்தேன்.

"கவலைப்படாதே, மற்ற கவிஞர்களை எண்ணிக் கலங்காதே"
நிலவை நான் நேசிக்கிறேன், நேசிக்கிறேன்

நீண்ட நெடு நாட்களுக்கு முன்பே நிலாப்பெண்ணை  மணம் புரிந்துவிட்டேன்
என் மன மேடையில்!

நான் கூற "தேன் நிலவிற்கு எங்கு சென்றாய்"
குறும்பாகக் கேட்டு விட்டது ஓட்டமெடுத்தது
அசரீரி!

கவிஞர் ஆட்கொண்டேசன்

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits