காதலுக்கு மொழிப்பாடங்கள்
தானே வந்துவிடும்!
கெமிஸ்ட்ரியும் நன்கு வரும்!
பிஸிக்ஸ் கேட்கவே வேண்டாம்,
அது காதல் மைதானம்!
வரலாற்று பாடங்கள் -
எழுத்தாளர்கள் கற்றுத்தருவார்கள்!
ஆனால் இந்த காதலுக்கு
கணக்கு மட்டும் தெரியாது
ஒன்றும், ஒன்றும் ஒரு கோடி என்பார்கள்!
ஒரு நொடியை ஒரு யுகம் என்பார்கள்!
கணக்கு தெரிந்தால்
காதல் நிகழாது - அங்கு
காரியம்தான் நிகழும்!
* * * *
கண்ணொடு கண்கள்
நோக்கினால்தான் காதல்! - ஆனால்
காதலுக்குக் கண்ணில்லை
என்னும் குற்றச்சாட்டும் உண்டு!
* * * *
காதலில் தோல்வி என்று
கடலில் குதித்தான் ஒருவன்!
காதலுக்கு ஏது தோல்வி!
காதல் அமரத்வம் வாய்ந்ததாயிற்றே!
காதலின் இலக்கு கல்யாணமா!
கல்யாணம் இல்லையேல் காதல் தோல்வியா!
காதல் என்ன கிரிக்கெட் விளையாட்டா
வெற்றி, தோல்வி சொல்ல!
கிரிக்கெட்டின் கதைதான் தெரியுமே!
இழுபறி 'ட்ரா'வும் உண்டு
மழைவந்து கெடுவதும் உண்டு!
மேட்சு 'பிக்ஸிங்'கும் உண்டு!
காதல் வயப்பட்டவர்கள்
காவிய நாயகர்கள்!
காதலுக்கு வெற்றியும் இல்லை
தோல்வியும் இல்லை!
காதலர் தற்கொலைகளில்
காதல்தான் சாகிறது!
காதல்தான் களங்கமுறுகிறது!
காதலர்களே! தற்கொலை வேண்டாம்!
காதலை வாழவிடுங்கள்!
மணம் முடிந்தால், மெய்யொடும்,
மனதோடும் உறவாடுங்கள்!
மாலையில்லையேல், மனதோடும்,
நினைவோடும் வாழுங்கள்!
நினைவிலும் இனிப்பதுதானே
நெஞ்சார்ந்த காதல்!
- கவிஞர் ஆட்கொண்டேசன்
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


