maniyosai.com

You are here: Home இலக்கியம் கவிதை வேண்டுமா வேற்று'மை' ?

வேண்டுமா வேற்று'மை' ?

E-mail Print
Share/Save/Bookmark

Incredible India

"வேற்றுமையில்     ஒற்றுமையாம்!"
வாய்கிழியப் பேசவேண்டாம்!

தேற்று'மை'யை   ஒற்றியொற்றி  
தீப்புண்ணில் பூசவேண்டாம்!

ஆரியராம், திராவிடராம்
கேரளராம்  ஆந்திரராம்
நூறுவகை கூறுசொல்லி
கூறுகெட்டுப் பேசவேண்டாம்!

மேகமது தண்ணீரை
மேதினிக்கு வழங்காமல்
போகத்தான் நினந்திட்டால்
சாகத்தான் வேண்டும்நாம்!

மூச்சுவிடும் காற்றதனை
மூர்க்கத்தொடு ஒருநாட்டார்
மூடிவிட வழிகண்டால் (அம்)
மூடரைநாம் என்செய்வோம்!

மாநிலங்கள் தேவையில்லை
கால்விலங்கும் தேவையில்லை
மாற்றங்கள் வேண்டுமிங்கே
ஏற்றங்கள் வேண்டுமெனில்!

நாட்டினையே துண்டாடும்
மாநிலங்கள் தேவையில்லை
கூட்டினையே கலைத்துவிடும்
காதகரும் தேவையில்லை!

நாட்டுடமை ஆக்கிடுவோம்
நதிகளையும், வளங்களையும்!
நாட்டினையே ஒன்றாக்கி
நாட்டாண்மை செய்திடுவோம்!

வேலிகளை ஒற்றுமையாய்
வேரழிப்போம் ஒத்து'மை'யால்
'ஆல்' ஒத்த தாயகத்தை
வரையறுப்போம் வேற்று'மை'யால்!

####XXX####

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

09 January 2012, 18.49 செய்திகள்
பென்னி குக்குக்கு மணிமண்டபம் : வைகோ பாராட்டு
சென்னை: முல்லைபெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி...மேலும்...
0 Comments , 131 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits