maniyosai.com

You are here: Home இலக்கியம் கவிதை கிரிக்கெட் நம் மதம்!

கிரிக்கெட் நம் மதம்!

E-mail Print
Share/Save/Bookmark

street cricket

சட்டென்று தொடர்வண்டி நடுவழியில் நிற்க
சன்னலின் வெளியே எட்டிப் பார்த்தேன்;
சுட்டெரிக்கும் வெய்யில்,
சோர்ந்து நின்ற மரக் கிளைகள்!


சுற்றம் நாடும் காக்கைகளும்,
சுறுசுறுப்பு குருவிகளும்
முற்றும் களைத்து முடங்கிப் போன நேரம்.

சட்டைக் காலரை உதறிய படியே
வெறித்து பார்த்தேன் வெய்யிலை!

வறண்டிருந்த மைதானம்;
பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன்
தொப்பித்தலையுடன் ஒரு பந்தை வீச
பட்டம் படிக்கும் மாணவன் ஒருவன்
மட்டையை சுழற்ற,
எட்டையே எட்டாத சுட்டிச்சிறுவன்
சட்டெனக் குனிந்து பந்தைத் தடுக்க;

'எரிக்கட்டும் வெய்யில்; பொருட்டல்ல' என்று
கிரிக்கெட்டு ஆட்டத்தில் கிறங்கி நின்ற சிறுவர்கள்!

குலமென்ன கோத்திரமென்ன ஓரளவும் தெரியாது.
வயதென்ன வசதியென்ன வேற்றுமைகள் கிடையாது.
ஆற்றங்கரை ஓரத்திலும், அரண்மனை கூடத்திலும்
வீற்றிருக்கும் விளையாட்டுப் பிள்ளையார் போல்

சிறுவர் முதல் பெரியோர் வரை யாவரையும்
கிரிக்கெட்டு கவர்ந்து நிற்கும் பெருமையினை அசை போட்டேன்!

'சல்யூட்' அடித்த காவலரிடம்
'சேர்மேன்' நின்று 'ஸ்கோர்' கேட்க
சந்தோஷத்தில் சிறகடித்த காவலரை நானறிவேன்!

பகலிரவு ஆட்டங்கள், ஒரு நாளின் ஆட்டங்கள்
வகைவகையாம் மாற்றங்கள், திகட்டாத கிரிக்கெட்டிலே!
மாறாத இளமையுடன் மெருகேறிய கிரிக்கெட்டை
பாராத கண்களில்லை, பேசாத வாய்களில்லை!!

நாட்டுப் பற்றையும், காட்டி நிற்கும்
நட்புணர்வையும் போற்ற வைக்கும்
சீரோடும் சிறப்போடும் கிரிக்கெட்டும் வாழட்டும்;
தீராத வேற்றுமைகள் கிரிக்கெட்டால் தீரட்டும்!

சட்டென்று தொடர்வண்டி சிலிர்ப்போடு நகர
சன்னலுக்கு நன்றி சொல்லி தொடர்ந்தேன் என் பயணத்தை!!

கவிஞர் ஆட்கொண்டேசன்

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

12 February 2012, 18.32 செய்திகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி
அடிலைட்: அடிலைட் நகரில் நடைப்பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு...மேலும்...
0 Comments , 226 Hits
02 April 2012, 22.47 வணிக செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளை ஒளிப்பரப்ப ஸ்டார் நிறுவனத்துக்கு உரிமம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி விளையாடி இந்தியாவில் நடக்கும் அனைத்து...மேலும்...
0 Comments , 50 Hits
01 May 2012, 18.15 செய்திகள்
நான் அரசியல்வாதி அல்ல : சச்சின் ஆவேசம்
புனே: தான் அரசியல்வாதி அல்ல என்றும் கிரிக்கெட்டை கைவிடும் எண்ணம்...மேலும்...
0 Comments , 70 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits