maniyosai.com

You are here: Home இலக்கியம் கவிதை நாக்கு தடித்த பெரியார்

நாக்கு தடித்த பெரியார்

E-mail Print
Share/Save/Bookmark


Karunanidhi vs periyar
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா!
கடவுளை மறுப்பவரெல்லாம் பெரியார் ஆக முடியுமா?

கடவுளை நம்புவோர், நம்பாதோர்
கடவுளை கற்பிப்போர் அனைவருக்கும்
கடன்பட்டு, நாட்டின் இறையாண்மைக்கு
உடன்பட்டு, ஆட்சிக்கு வந்து விட்டு
பதவி சுகத்தையும் அனுபவித்துக் கொண்டு
தம்மை பெரியாராய் காட்டிக் கொள்வோரெல்லாம்
பெரியாராகத்தான் முடியுமா!
அண்ணனின் உண்மை தம்பியாகத்தான் முடியுமா!

செயற்கரிய செய்தார் அன்றொரு பெரியார்!
தேர்தல் எதையும் அவர் சந்திக்கவில்லை;
சொந்த பந்தங்கள் பற்றி சிந்திக்கவில்லை!
நாடகம் ஆடவில்லை, சினிமா படம் எடுக்கவில்லை.
சமுதாய சீர்திருத்தமொன்றே அவரது உயிர்மூச்சு;
சுத்தமாகவும், சுதந்திரமாகவும் ஒலித்தது அவர் பேச்சு!

கடவுள் வாழ்த்து எழுதிய திருவள்ளுவர் திராவிடர்தான்!
தேவாரம், திருவாசகம் எழுதியோரெல்லாம் திராவிடர்தான்!
கம்பனும் இளங்கோவடிகளும் திராவிடர்தான்!
சுப்பிரமணிய பாரதியும் திராவிடர்தான்!
காஞ்சி காமாட்சியும், மதுரை மீனாட்சியும்
கன்னியாகுமரியும், செந்தூர் முருகனும்
பழனியாண்டியும், அய்யனாரும், அங்காளம்மனும்
அருளாட்சி செய்வது தமிழ்நாட்டில்தான்!

இந்துக்களும், இஸ்லாமியர்களும், இயேசு மதத்தவரும்
தமிழ்நாட்டின் நாடி நரம்புகள் அல்லவா?

நாத்திகர் மட்டுமா வாக்களித்து
நாட்டையாள வந்து விட்டார்
இன்றைய நாக்கு தடித்த பெரியார்
விஜயதசமி கொண்டாடுவதை வீரமாய் கண்டிக்க?

இவரை ஆத்திகரும் மன்னிக்க மாட்டார்
நாத்திகரும் மன்னிக்க மாட்டார்.

-கவிஞர் ஆட்கொண்டேசன்

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (2)
  • அன்பரசன்

    இந்த ஆளை திட்டி ஏன் டைம் வேஸ்ட் பண்றீங்க?

  • Joseph

    Kalaignar getup nice

Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

31 March 2012, 18.32 செய்திகள்
கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே வேண்டும் : பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தி செய்யப் படும்...மேலும்...
0 Comments , 93 Hits
18 February 2012, 22.21 தலைப்புச் செய்திகள்
ஜெயலலிதா பெயரளவில்தான் பங்குதாரராக இருந்தார் : பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா தகவல்
பெங்களூர்: ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதா செயல்படாத...மேலும்...
0 Comments , 171 Hits
20 February 2012, 17.50 செய்திகள்
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு
சென்னை: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்...மேலும்...
0 Comments , 149 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits