
ஏழைகள் இருக்கும் வரை இலவசங்களும் இருக்குமாம்!
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று
இவர்கள் சொல்லி வந்ததற்கு இதுதானா அர்ததம்!
ஏழைகளுக்கு இலவசங்களை கொடுத்தால்
ஏழ்மை அழிந்துவிடுமா என்ன?
ஆடுகள் நனைகிறதே என்று ஓநாய்கள் அழுததாம் !
எல்லாவற்றுக்கும் ஒரு பழமொழியுண்டு எம் மொழியாம் செம்மொழியிலே!
மக்களுக்கு ஏன் தான் இந்த இலவச மோகமும்; இலவச தாகமும்.!
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்
என்று கூறினால் விற்பனை இரட்டிப்பு இலவசம்!
தொலைகாட்சி பெட்டிகள் இலவசமென்றால்
வாக்கு பெட்டிகளில் வாக்குகள் இலவசம்!
பொங்கலுக்கு வேட்டி இலவசம், சேலை இலவசம்,
வெல்லம் இலவசம், எல்லாமே இலவசம்!
இனாம் கேட்டு இனிமேல் யாரும் தலை சொறியத் தேவையில்லை!
தேவையறிந்து தானே தலையில் சொரியும் இலவசங்கள்!
ஏழைகள் இருக்கும் வரை இவர்கள் இலவசங்களை அள்ளிக் கொடுப்பார்களாம்!
ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டுமாம்,
இவர்கள் அரச வம்சமாகவே திகழ வேண்டுமாம்!
என்னே சமுதாய அக்கரை! என்னே தாராளம்,என்னே தர்ம சிந்தனை!!
“ஏற்பது இகழ்ச்சி” என்று எழுதிய தன்மானத் தமிழச்சியை தள்ளிவைத்துவிடலாம்!!
-கவிஞர் ஆட்கொண்டேசன்
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




