maniyosai.com

You are here: Home இலக்கியம் கவிதை தாயின் மணிக்கொடியை தலை நிமிர்ந்தே ஏற்றடா!!

தாயின் மணிக்கொடியை தலை நிமிர்ந்தே ஏற்றடா!!

E-mail Print
Share/Save/Bookmark

Indian flag with a Muslim boy

வீரம் மிகுந்த தேசத்தை - நாம்
சோரம் போக விடுவோமா! - காஷ்மீரம்
எங்கள் தேசம்தான் - அதை
யாரும் சிறையிட விடுவோமா!!

நாட்டை மீட்டவர் ஒரு காந்தி - அதில்
பூட்டைப் போட்டவர் மறுகாந்தி! - வெட்கக்
கேட்டை யாரிடம் சொல்லுவது - அவர்
போட்டக் கோட்டிலா செல்லுவது!!

வந்தே மாதரம் என்றிடுவோம் - யார்
முந்தானையையும் நாம்பிடியோம்! - பெரும்
தந்திரக் காரரை நாமறிவோம் - நாம்
இந்தியர் என்பதை தான் மறவோம்!!

நாட்டின் மகுடம் காஷ்மீரம் - அது
ஏட்டில் மட்டுமா நம் தேசம்! - அது
மூட்டப் பனியில் உறைந்திட்டால் - நாம்
சூட்டைக் காட்டி மீட்டிடுவோம்!!

எல்லை மீறுதல் தான்குற்றம் - நம்
எல்லை வரையில் நம் கொற்றம் - அட
எல்லா மக்களும் நம் சுற்றம் - அது
இல்லை என்றால் விடமாட்டோம்!!

கண்களை விற்று சித்திரமா - நம்
மக்களை விற்று மணிமுடியா!
தங்குத் தடைகளை எதிர்கொள்வோம் - நாம்
எங்கணும் நம் கொடி ஏற்றிடுவோம்!!

பட்டாய் கொடியை பறக்கவிட்டு - உடன்
மிட்டாய் களையும் தின்றுவிட்டு
விட்டால் போதும் என்றேதான் - நாம்
சிட்டாய் பறப்பது தான்முறையா!!

தாயின் மணிக்கொடி என்றிட்டால் - அது
தொப்புள் கொடிக்கு நிகராமே - ஒரு
கையில் பிடித்த மணிக்கொடியை - நம்
குமரன் உயிராய் மதித்தானே!!

அமைதி அமைதி என்றவர்கள் மிக
அஞ்சி அஞ்சிப் பேசுகிறார்
அமைதி வேண்டும் என்பதனால் ஒரு
அறைக்குள் மணிக்கொடி ஏற்றுவதா!!

இதயம் இணைத்திடும் பாதைகளில் - ஒரு
இம்மிக் கல்லும் கூடாது - சரி
அதையும் கொஞ்சம் அனுமதித்தால் - நம்
இதயம் ஒருகணம் தாங்காது!!

- கவிஞர் ஆட்கொண்டேசன்

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

08 April 2012, 17.36 தலைப்புச் செய்திகள்
வசதிப்படும் போது பாக்கிஸ்தான் செல்வேன் : இந்திய பிரதமர்
புதுதில்லி: வசதியான நேரத்தில் தான் பாக்கிஸ்தான் செல்லப் போவதாக...மேலும்...
0 Comments , 95 Hits
06 January 2012, 18.48 தலைப்புச் செய்திகள்
மாயாவதி நீக்கிய ஊழல் அமைச்சர் பாஜகவில் சேர்ப்பு : பாஜகவில் குழப்பம்
புதுதில்லி: உத்திரபிரதேச மாநிலத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ்...மேலும்...
0 Comments , 173 Hits
29 December 2011, 18.21 செய்திகள்
தேசிய மாமனிதர் அந்தஸ்து லாலுவுக்கு வழங்கப் பட வேண்டும்: பாஜக கோரிக்கை
புதுதில்லி: தேசிய பறவை என மயில் அறிவிக்கப் பட்டிருப்பதை போல, தேசிய...மேலும்...
0 Comments , 159 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits