maniyosai.com

You are here: Home இலக்கியம் கவிதை மாறத்தான் மாரத்தான்!!

மாறத்தான் மாரத்தான்!!

E-mail Print
Share/Save/Bookmark

marathon

ஓடுகிறோம்,ஓடுகிறோம்
மாரத்தான் ஓடுகிறோம்.

உலகம் மாறத்தான் ஓடுகிறோம்
நல்லவை கூறத்தான் ஓடுகிறோம்;

நடிகைகளும்,நடிகர்களும்,
முதியவரும்,சிறியவரும்
ஒரு சேரத்தான் ஓடுகிறோம்.

காவல் துறையின் அனுமதியோடும்
காவலோடும்தான் ஓடுகிறோம்;



அனாதை குழந்தைகளுக்காக ஓடுகிறோம்
அகில உலக அமைதிக்காக ஓடுகிறோம்;

காலை நேரம் தான் ஓடுகிறோம்
காலம் நேரம் பார்த்துதான் ஓடுகிறோம்
அதுவும் ஞாயிறு காலை தான் ஓடுகிறோம்;

சென்னைவாசிகளே சற்று பொறுத்தால்தான் என்ன ?
போக்குவரத்து ஸ்தம்பித்தால் என்ன?

சாலையில் செல்வதையும்
சாலைகளைக் கடப்பதையும் சற்றுத் தள்ளிப் போட்டால்தான் என்ன?

விமானம் பிடிக்கவா போகிறீர்கள்:
அல்லது இரயிலை பிடிக்கப் போகிறீர்களா?
ஒரு சில மணி நேரங்கள் பொறுத்தால் தான் என்ன?

அட; அவசர சிகிச்சைக்காகப் போகிறீர்களா?
போகிற உயிரைத் தடுத்தா நிறுத்த முடியும்
பொறுமையாகத்தான் செல்லுங்களேன் ?

என்னது, கல்யாண வீட்டிற்குப் போகிறீர்களா?
நீங்கள் போகா விட்டால் கல்யாணம் நின்று விடவா போகிறது?

ஐயா, துக்கம் விசாரிக்கப் போகிறீர்களா?
செத்தவன், செத்து விட்டான், நீங்கள் போய்த்தான் என்ன ஆகப் போகிறது;

நாங்கள் மட்டும் என்ன வேலை வெட்டி எதுவுமின்றி டிவியில் தெரியவா ஓடுகிறோம்!!

 

கவிஞர் ஆட்கொண்டேசன்




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

30 December 2011, 11.40 தலைப்புச் செய்திகள்
புதுவை அருகே கரையைக் கடந்தது தானே புயல்
புதுச்சேரி அருகே தானே புயல் இன்று காலை 7 மணியளவில் கரையைக் கடந்தது....மேலும்...
0 Comments , 183 Hits
20 February 2012, 12.33 செய்திகள்
சென்னையில் கடும் பனிமூட்டம் : மக்கள் பீதி
சென்னை: இன்று (பிப்.20) காலை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில்...மேலும்...
0 Comments , 121 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits