maniyosai.com

You are here: Home இலக்கியம் கவிதை கவிதை-தலைவர்கள் பிழைத்து வந்தால்

கவிதை-தலைவர்கள் பிழைத்து வந்தால்

E-mail Print PDF
Share/Save/Bookmark

wine shopகள்ளச் சாராயத்தை ஒழிக்கவே சத்தியமாய்
கடைகளைத் திறந்தார்கள்!
வள்ளுவரின் விசிறிகள் வசதியாய்
‘கள்ளுண்ணாமை’யை மறந்தார்கள்.

 

பணம் படைத்தவர்களுக்கு மட்டும் பர்மிட்டா?
பாவம்! ஏழைகள் என்ன செய்தார்கள்
பாவம் எனவெல்லாம் சமதர்மம் பேசினார்கள்
மூதறிஞரை முக்காடிடச் செய்தார்கள்.

கடைகளைத் திறந்தாயிற்று ஒருவழியாய்
கடைமடைகள் வரை தண்ணீர் விரைந்தாயிற்று.
அடிஉதை வாங்கிடத் தாய்குலம் பழகியாயிற்று.
அடுப்பில் உறங்குவது பூனைகளுக்கு எளிதாயிற்று;
குடிபோதைத் தெளிந்தது போல் திடீரென கடைகளை
மூடினார்கள்!
அதையிதைக் காரணம் காட்டி மறுபடியும் கடைகளைத்
தேடினார்கள்!

பல குடிகளைக் கெடுத்து வந்தப் பாவப்பணம்
சிலபலத் தனியாருக்கு போகலாமா
பொறுப்போடு சிந்தித்தத் தலைவர்களை
பொறுப்பின்றி மறந்துநாம் போகலாமா!

அரசுக் கடைகள் வந்துவிட்டன
அரசின் கருவூலங்கள் நிறைந்துவிட்டன.
மீன் விற்றக்காசு நாறுவதில்லை
நாய் விற்றக்காசு குரைப்பதுமில்லை!

அந்நாளைய காந்தியும் பின்னாளைய
தென்னாட்டு காந்தியும் பிழைத்து வரவா போகிறார்கள்!
அவர்கள்தான் பிழைக்கத் தெரியாமல் போய்விட்டார்கள்!

மூதறிஞரும், பேரறிஞரும், தேசப்பிதாவும்
ஒருவேளைப் பிழைத்து வந்தால்,
தமிழ்நாட்டில் பிறந்து அரசு மதுக்கடை வாசல்களில்
ஆடை நழுவியதுகூடத் தெரியாமல்
வீரவசனம் பேசிக் கொண்டிருப்பார்களோ என்னவோ!

கவிஞர் ஆட்கொண்டேசன்




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 06 January 2010 12:09 )  


More and More


கிட்டதட்ட

29 February 2012, 19.03 தலைப்புச் செய்திகள்
மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்கக் கூடாது : ராமதாஸ்
சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை தமிழக அரசு...மேலும்...
0 Comments , 81 Hits
08 February 2012, 18.07 தலைப்புச் செய்திகள்
முழு மதுவிலக்கு கோரி போராட்டம் : ராமதாஸ் அறிவிப்பு
காஞ்சிப்புரம் : தமிழகத்தில் முழு மதுவிலக்கு கோரி மாநிலம் தழுவிய...மேலும்...
0 Comments , 326 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits