maniyosai.com

You are here: Home இலக்கியம் கவிதை போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்

E-mail Print
Share/Save/Bookmark

saamiyar

இராமன் எத்தனை ராமனடி என்பது திரைப்பாடல்!
போலிகள் எத்தனை போலிகளடி இன்றைய நிலைப்பாடல்!!

போலிச் சாமியார்கள்!
போலி மருத்துவர்கள்!
போலி அரசியல்வாதிகள்!
போலி ஆன்மீகவாதிகள்!
போலி நாத்திகவாதிகள்!
போலிகள் அசல்களை விட “பளிச்”, “பளிச்”
போலியாளர்கள் பங்கு பிரிக்கையில்தான் “இளிச்”


யாரைதான் நம்புவதோ பேதை நெஞ்சம் என்று
குழம்பிப் போன தமிழர்களே கொஞ்சம் நில்லுங்கள்!

கள்ள நோட்டு கலவரத்தில் நல்ல நோட்டுக்களை எறிய முடியுமா!
உண்மைக் கவிஞன் (போலியல்ல) என்ற முறையில் சிறிய அறிவுரை!

சாமியை நம்புங்கள்!
அல்லாவானாலும் சரி, இயேசுவானாலும் சரி, இராமனானாலும் சரி!
எல்லா சாமிகளும் நல்ல சாமிகள்தான்! நம்புங்கள்!
சாமியை விட சாமியாரை வெறித் தனமாக நம்பாதீர்கள்.
உண்மை சாமியார்களையும்; அண்மை சாமியார்களையும் அலசுங்கள்!

சொகுசு வாழ்க்கையும், சல்லாப வாழ்க்கையும், சாமியார்களுக்கு அழகா!
‘திடீர்’ சாமியார்களின் சொக்க வைக்கும் சொற்பொழிவுகளைக் கேட்டு
சொத்துக்களை இழந்து விடாதீர்கள்!
அரசியல் வித்தகர்களின் அடுக்கு மொழிகளைக் கேட்டு
இத்தனை காலம் ஏமாந்தது போதாதா!

காவி மட்டுமே போலியா!
வெள்ளை உடையிலும்,
மஞ்சள் உடையிலும்,
கறுப்பு உடையிலும்
போலிகளே இல்லையா

அகப்பட்ட சாமியார்களின்
அந்தரங்க லீலைகளை
படம் பிடித்து காட்டுவோரின்
சமுதாய அக்கறைகளும் போலிகளே!

ஒரே கல்லில் எத்தனை மாங்காய்கள்!
சின்னத்திரையில் இல்லம்தோறும் நடுக்கூடத்தில்
சாமியார்களின் சல்லாபப் படம் ஒரு மாங்காய்!

ஒரு போலி சாமியாரைத் துகிலுரித்துக் காட்டி
ஒரு பகுத்தறிவுவாளராக தம்மை காட்டிக் கொண்டது
இரண்டாவது மாங்காய்!

எத்தனையோ நாட்கள்
எட்டி நின்று பார்த்து விட்டு
‘சட்’டென ஒரு நாள் படம் பிடித்துக் காட்டி
மக்களுக்கு வழிகாட்டும் மாபெரும் மீடியாவை
மஞ்சள் பத்திரிகையாக மாற்றியது மூன்றாவது மாங்காய்!

மக்கள் என்ன மாங்காய் மடையர்களா?
போலி சாமியார்களையும் மதிக்க மாட்டார்கள்!
இந்தியத் தொலைகாட்சிகளில் முதல்முறையாக
திரைமறைவு காட்சிகளை அரங்கேற்றிய
சின்னத்திரைகளையும் மதிக்க மாட்டார்கள்!!!

கவிஞர் ஆட்கொண்டேசன்

 


 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

09 January 2012, 21.28 சினிமா செய்திகள்
பொங்கல் ஸ்பெஷல் : சன் டி.வி.யில் எந்திரன்
சென்னை: பொங்கல் நாள் சிறப்பு திரைப்படமாக எந்திரன் திரைப்படத்தை...மேலும்...
0 Comments , 162 Hits
01 April 2012, 18.06 தலைப்புச் செய்திகள்
2ஜி வழக்கில் தயாநிதி மாறன் சிறைக்கு செல்வார் : சுப்ரமணிய சுவாமி
திருநெல்வேலி: 2ஜி வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி...மேலும்...
0 Comments , 90 Hits
27 April 2012, 18.38 தலைப்புச் செய்திகள்
அவதூறு : சுப்ரமணிய சுவாமி மீது கார்த்தி சிதம்பரம் வழக்கு
சென்னை: தங்கள் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி கார்த்தி சிதம்பரம்...மேலும்...
0 Comments , 79 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits