
எட்டுக்கெட்டு அறைக்குள் நுழைந்தவுடன் அவளைக்
கட்டிப்பிடித்தான்;
அங்கிங்கெனாத படி எங்கும்
தொட்டு ரசித்தான்;
அங்குலம் அங்குலமாய் அவளை
வர்ணித்தான்!
அங்கலாய்த்தான் அவளது கூண்டுக் கிளி வாழ்க்கையை
அவள்தான் உலக அழகியென்றான்;
அவளுக்காக தாஜ்மகால் கூடக் கட்டுவேன் என்றான்!
கல்யாணம் கட்டிக்கொள்கிறேன் என்றான்.
கடைவீதியில் உள்ள வளாகத்தை
எழுதிக் கொடுப்பதாக கதையடித்தான்!
எல்லாம் முடிந்து எழுந்த பிறகு
சிகரெட்டை பற்ற வைத்தபடி,
'பேர் கேட்க மறந்து விட்டேனே.' என்றான்.
'சுந்தரி' என்றாள்.
'தேங்க்யூ சுமதி' என சொல்லிவிட்டு நடந்தான்!!
-கவிஞர் ஆட்கொண்டேசன்
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


